உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:புதிய கல்வி முறை-10-2-3.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

19 இருந்தேன்' என்று தமிழுக்கு ஒன்றும் செய்யவில்லை. கல் வித்துறை மட்டுமன்றி வேறு எத்துறைக்கும் இது பொருந்தும். எனினும் நான் இங்கே இந்தத் துறையின் அளவோடு கிற்கின்றேன். தமிழ் நாட்டில் தமிழ் கட்டாயம் இல்லை. கல்லூரி களில் பிரஞ்சு பயில்கின்றவர் எண்ணிக்கை வளர்கின்றது. ஆனல் மராட்டிய மாநிலப் பள்ளிகளில் மாராத்தி கட்டாயப் பாடமாக உள்ளது. அங்கிய மாநிலத்தினராகிய எந்த மொழியாளரும் இந்திக்கு முன் மராத்தியைக் கட்டாயம் பயின்ருக வேண்டும். இப்படி வேறு எந்தெந்த மாநிலங் களில் உள்ளதோ யானறியேன் ஏன் இந்த வேறுபாடு? இப்படியே பாடத் திட்டத்திலும் பல ஏற்றத் தாழ்வுகள் உள்ளன. ஒரு மாநிலத்தில் ஆரும்வகுப்பிற்கு அமைந்த பாடத்திட்டம் மற்ருென்றில் எட்டாம் வகுப்பிற்குக் கூட இல்லை. இப்படிப் பலப்பல வேறுபாடுகள். இந்த வேறுபாடு களெல்லாம் நீங்க வேண்டியே அனைத்திந்தியாவுக்கும் ஒரே அடிப்படையில் கல்வித் திட்டத்தை வகுக்க முனைகின்றனர். அதுவே 10 + 2 + 3 என்னும் பகுப்புத் திட்டமாகும். இந்திய நாட்டில் ஒரு சில மாநிலங்கள் இந்தத் திட்டத்தை முன்னரே செயலாக்கியுள்ளன; சில செயற் குழுக்களையும் தனி அலுவலர்களேயும் நியமித்து செயற்படத் தொடங்குகின்றன. சில இன்னும் கவலையற்ற உறக்கத்தில் உள்ளன. என்னேக் கேட்டால் இந்திய ஜனதிபதி அவர்கள் ஒரு தனிச் சட்டத்தினல் (Ordinance) 1978 சூன்னுக்குள் அனைத்து மாநிலங்களும் ஒரு வரையறுத்த நல்லதிட்டத்தில் செயல்படத் தொடங்க வேண்டும் என்று ஆணையிட வேண்டும் எனக் கூறுவேன். கல்வியியின் பகுபாடு மேலே 10+2+3 என்ற ஒருமுறை காட்டில் புகுத் தப் பெறுகின்றமை கண்டோம். 5 வயது முடியும் வரை