உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:புதிய கல்வி முறை-10-2-3.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

xiii வல்லவராக அமைதலோடு, சொல்லித் தரும் திறனும் பிறநல்லியல்புகளும் பெற்றவராதல் வேண்டும். அப்படியே பயில்கின்ற மாணவர்களும் எதோ பொழுது போக்குக்கே பள்ளியும் கல்லூரிகளும் அமைகின்றன என்று எண்ணுமல், 'அரசாங்கச் செலவில் ஹாஸ்டல் உணவும் நூல்களும் படிப்பும் கிடைக்கின்றன; நமக்கென்ன என்ற போக்கில் இராமல், கற்பன கற்றுத் தம்மையும் அதே வேளையில் சமுதாயத்தையும் காட்டையும் உயர்த்தப் பாடுபட வேண்டிய வகையில் பயில வேண்டும். இவற்றைக் கருத்தில் கொண்டுதான் கல்லாசிரியர் இலக்கணம், பாடம்பயிற்றும் முறை, கன்மாணவர் இலக்கணம், பாடம் பயிலும் முறை ஆகியவை பற்றிப் பல நூற்ருண்டுகளுக்கு முன்பே நன்னூல் காட்டிய கருத்துக்களையும் அப்படியே இணைத்துள்ளேன். அதன் விளக்கங்களுக்கு இலக்கியமாக எழுத்தினைக் காட்டுவதைக் காட்டிலும் ள்ட்டு கல்லாசிரியர்களையும் கன் மாணுக்கர்களையும் காட்ட வேண்டும் என்ற உணர் வுடன்ேயே அவற்றிற்கு விளக்கம் எழுதாது விட்டு விட்டேன். நாட்டுக் கல்வி இத்தகைய நல்லாசிரியர் வழி நன்மாளுக்கரை உருவாக்கும் வகையில் செயல்படுவதாக! அப்படியே நல்ல தரமான நூல்கள் வெளிவர அரசாங்கம் ஆவன செய்வதாக! தமிழக அரசாங்கம் புதிய திட்டத்தைச் செயல் படுத்தத் தொடங்கியுள்ளது. புதிய விதிமுறைகள், பாடத்திட்டங் கள், பாடநூல்கள், ஆசிரியர் தகுதி, பயிற்றும் முறை, தேர்வு முறை, தேர்வு கிலே முதலிய பலவற்றைப் பற்றி எண்ணிச் செயலாற்ற வேண்டுமெனக் கேட்டுக் கொள்ளு -கிறேன். இப் புதிய கல்விமுறை பற்றித் தமிழில் விளக்கமான நூல் இல்லையென எண்ணிய காரணத்தினலேயே இந்த நூலை எழுதத் துணிந்தேன். அன்றி நான் இத்துறையில் வல்லவன்