உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:புதிய கல்வி முறை-10-2-3.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வளரும் கல்வி அன்றும் இன்றும் தமிழ் நாட்டுக் கல்விமுறையில் பெருமாற்றம் புகுத்த ஆவன கடந்து கொண்டிருக்கின்றன. அனைத்திந்திய அடிப்படையில் இம்மாற்றம் செயல்படுகிறது. மாணவர் பயிலும் போதே தொழில் நலம் பெறத் தக்க வகையில் - வருங்காலத்தில் தங்கள் வாழ்வை வளமாக்கிக் கொள்ளும் வகையில்-புதிய கல்வித்திட்டம் திட்டப் பெறுகிறது. மத்திய அரசும் மாநில அரசுகளும் பல கோடிக்கணக்காகக் கல்விக்குச் செலவிடும் பெரும் பொருள் வீணே பயனற்றுக் கழிவதை எண்ணி எண்ணி, புதிய பயனுள்ள கல்விக்கு வகை தேடுகின்றன. இந்த வகையில் எத்தனையோ மாற்றங்கள் இப்போது வருகின்றன. இந்த மாற்றங்களை வேண்டாமெனச் செல்லுபவர்களும் உளர். ஆயினும் குழ்ந்து கோக்கின் இத்தகைய கல்விமுறை தமிழ்நாட்டுக்குஏன் - இந்திய நாட்டுக்கே புதிய ஒன்றன்று என்பது விளங்கும். இந்திய நாட்டின் பழங்கால வாழ்வை நமக்கு விளக்கிக் காட்டுவன இலக்கியங்களே. வடகாட்டு இராமாயணம், பாரதம் போன்ற இதிகாசங்களும் தமிழ் நாட்டுச் சங்க இலக்கியங்களும் அக்கால வாழ்வை நமக்குப் படம் பிடித்துக் காட்டுகின்றன. அவை காட்டும் கல்விமுறை