பக்கம்:கவியின் கனவு (நாடகம்).pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

9 -இ கனவு நிதைவேலது 9 (பேராசிரியர் அமரர் கல்கி அவர்களின் விமர்சனம்) . . . கவிகள் என்பவர்கள் உலகத்தில் எதற்காகத்தான் பிறக்கிறார்களே, தெரியவில்லை. பிறந்தவர்கள் சும்மா இருக்கிறார்களா? பட்டப்பகலில் ஏதாவது கனவு காண்கிறார்கள். பகற்கனவு காண்பதே அவர்களுடைய வேலை என்றுகூடச் சொல்லலாம். அப்படித்தான் கனவு காண்கிறார்களே, அதை வெளியில் சொல்லாமல் தங்கள் மனத்திற்குள்ளே மூடி மறைத்து வைத்திருக்கிறார்களா? அதுவும் இல்லை. அந்தக் கனவுகளை வைத்துக் கவிபாடுகிறார்கள். பிறகு, அக்கவிகளை ஊரெல்லாம் பரவச் செய்கிறார்கள். தங்களை இல்லாத கஷ்டங்களுக்கெல்லாம் உள்ளாக்கிக் கொள்கிறார்கள். பிறரையும் கஷ்டப்படுத்துகிறார்கள். கடைசியில் என்ன ஆகிறது? நம்முடைய தலையில் எப்போது எந்த பாறாங்கல் விழப் போகிறதோ என்று நாம் கவலைப்பட்டுக் கொண்டு உட்கார்ந்திருக்க வேண்டி வருகிறது. ஒரு நாடகத்தில் தலைமை வகிப்பதென்றால் ஏதோ எளிதான காரியம் என்றும், உல்லாசமாக முதல் வரிசையில் உட்கார்ந்து நாடகத்தைப் பார்த்துக் களித்துவிட்டு வரலாம் என்றும் நான் எண்ணிக்கொண்டிருந்தேன். அது வீண் கனவுதான் என்று. 'கவியின் கனவு’ என்னும் நாடகத்தைச் சென்ற வாரத்தில் பார்த்தபோது நான் உணர வேண்டியதாயிற்று. அந்தப் பொல்லாத ராஜகுரு அவ்வளவு பெரிய பாறாங்கல்லைத் தூக்க முடியாமல் தூக்கிக் கொண்டு வருகிறானே, அவன் அதைத் தலைமை வகிக்கும் நமது தலையில் போட்டு வைக்கப் போகிறானோ என்று எனக்குப் பெருங்கவலையாகி விட்டது. தலைப்போனால் பாதகமில்லை. ஆனால், நாடகத்தை முழுவதும் பார்த்து முடிவு தெரிந்து கொள்ள முடியாமல் போய்விடுமே! இதுதானே அதிகமாகக் கவலையை அளித்தது. - கவிஞர் ஒருவர். விதியை வெல்ல வேண்டும் என்றும், உலகத்தில் வறுமையே இல்லாமல் செய்துவிட வேண்டும் என்றும்,