பக்கம்:கவியின் கனவு (நாடகம்).pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

10 கவியின் கனவு ”تمہ_ உயர்வு தாழ்வுகளை ஒழித்துக் கட்டிவிட வேண்டும் என்றும் - இப்படியெல்லாம் கனவு காண்கிறார். இந்த இலட்சியங்களை யெல்லாம் எதுகை மோனையுடன் பாடல்களாகப் பாடுவதினா லேயே சாதித்துவிடலாம் என்றும் அக்கனவில் கருதுகிறார். ஆனால், உண்மையில் இதெல்லாம் லேசில் நடக்கிற காரியமா? அந்தத் தேசத்து அரண்மனை ராஜகுரு வந்து குறுக்கிடுகிறான். கனவு காண்கிற கவியைச் சிறையிலே பிடித்து அடைக்கிறான். கவிஞர் சித்த சுவாதீனத்தை இழந்து பித்தராகிறார். பிதற்றிக் கொண்டே சிறையில் வசிக்கிறார். அவருடைய மகனும், மகளும் வயதாகி வளர்ந்து, நாடகக் கலைஞர்கள் ஆகிறார்கள். ராஜகுரு என்னும் வேஷதாரியோ, ருஷியா தேசத்து ஸார் சக்கரவர்த்தியையும் சக்கரவர்த்தினியையும், இளவரசன், இளவரசி முதலியோரையும் தன்னுடைய கண்களின் காந்த சக்தியினாலும், மனோவசிய மாய சக்தியினாலும் இஷ்டம் போல் பல காலம் ஆட்டிவைத்து வந்த ரஸ்புடின் என்பவனை ஒத்தவன். அந்தத் தேசத்து அசட்டு ராஜா, அகம்பாவம் பிடித்த ராணி, அவர்களுடைய செல்வ குமாரி ஆகியவர்களை அந்த ராஜகுரு ஆட்டி வைத்துக் கொண்டிருக்கிறான். அவர்கள் மீது தனக்குள்ள ஆதிபத்தியத்தின் மூலம் நாட்டின் பல அக்கிரமங்களைச் செய்து வருகிறான். ஆனால், சேனாதிபதி சுகதேவனும், அவனுடைய சகோதரி கனிமொழியும் மட்டும் ராஜகுருவின் மாயவலையில் சிக்கவில்லை. அதற்கு மாறாக, சேனாதிபதியின் சகோதரி, கவியின் குமாரன் மணிவண்ணனுடைய அன்பின் வசமாகி, அவனை மணக்க விரும்புகிறாள். ராஜகுரு இளவரசியின் கற்பைக் கெடுத்து, பிறகு அவளை நாடகக் கலைஞன் மணிவண்ணனுக்கு மணஞ்செய்து வைக்கச் சூழ்ச்சி புரிகிறான். அந்தச் சூழ்ச்சியைக் கெடுக்கத் தீர்மானித்த சேனாதிபதியின் சகோதரி கல்யாணப் பந்தலில் திடீரென்று தோன்றி. மணமகன் கழுத்தில் மாலையைப் போட்டு விடுகிறாள். ராஜகுருவின் மோசச் சூழ்ச்சிகள் எல்லாம் வெளிப்படப் பார்க்கின்றன. அவன் பெரிய பாறாங்கல்லைத் தூக்கிக்கொண்டு யார் தலையிலோ போடுவதற்கு ஓடுகிறான். பிறகு, சேனாதிபதி யுடன் கத்திச் சண்டையிட்டுத் தோல்வியடைகிறான். முடிவில், ஒரு