பக்கம்:தமிழ்ச்செல்வம்.pdf/297

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

296 இ. ஒளவை சு. துரைசாமி

தேவர்களும் தேவமங்கையரும் நன்கு ஒப்பனை செய்கின்றனர். இந்திரன் முதலிய இறையவர் தமக் குரிய முறைப்படி சூழ்கின்றனர். முன் செல்வோர் முன்செல்ல, அருகு செல்வோர் அருகு செல்ல, திருவுலா புறப்பாடாகின்றது. சல்லரி, தாளம், தகுணிச்சம் முதல் முருடு ஈறாகவுள்ள பல்வகை வாச்சியங்கள் முழங்குகின்றன. இருது, யோகம், தவம் முதலாகக் குணங்கள் ஈறாகப் பலவும் வந்து

இமையோர் பெருமானே போற்றி, எழில்சேர் உமையான் மணவாளா போற்றி, எமையாளும் தீயாடி போற்றி சிவனே அடிபோற்றி ஈசனே எந்தாய் இறைபோற்றி, தூயசீர்ச் சங்கரனே போற்றி, சடாமகுடத் தாய்போற்றி பொங்கரவா பொன்னங் கழல்போற்றி, அங்கொருநாள் ஆய விழுப்போர் அருச்சுனன் ஆற்றற்குப் பாசுபதம் ஈந்த பதம்போற்றி, தூய மலைமேலாய் போற்றி, மயானத்தாய் வானோர் தலைமேலாய் போற்றி தாள் போற்றி, நிலைபோற்றி

எனப் போற்றிப் பூமாரி பொழிய, பெருமான் உலா வருகின்றான். வீதியில் பேதை முதலாகப் பேரிளம் பெண் ஈறாகப் பல்வகை மகளிரும் தம்மையும் செவ்வே புனைந்து கொண்டு, பரமனைத் தம் கண்களாரக் கண்டு அறிவு சோர்ந்து அலமரல் எய்துகின்றனர். அவருள், “பேதைப் பருவம் பிழையா தாள், நன்றாகத் தாலி க்ழுத்தணிந்து, சந்தனத்தால் மெய்ப் பூசி, நீல அறுவை விரித்துடுத்து புனையப்