பக்கம்:தமிழ்ச்செல்வம்.pdf/298

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ்ச் செல்வம் 297

பெற்ற பந்தரில் பாவையொன்றை வைத்து விளையாடுகின்றாள். அவளை நோக்கி, “இப் பாவைக்கு, தந்தை யார்?’ என்று ஒருத்தி வினவ, “இதற்குத் தந்தை ஈசன் எரியாடி’ என்கின்றாள். இவள் பரமன் உலாவரக் கண்டதும், தன் பருவத்துக்கு ஏலாத காமக் குறிப்பு எய்துகிறாள்.

“பேரொளிசேர் காட்சிப் பெதும்பைப் பிராயத் தாள்” ஒருத்தி, தோழியருடன் கூட மணலில் காம னுடைய உருவம் எழுதி விளையாடிக் கொண்டிருக் கின்றாள். அவ்வுருவில் காமன் வடிவு முடித்துக் கரும்பு வில்லும் மலரம்பும் தேரும் எழுதுங்கால், பரமன் வீதியுலா வந்து விடுகின்றான். அவள்,

“தானமர, நன்றறிவார் சொன்ன நலம்தோற்று, நாண்தோற்று, நின்றறிவு தோற்று நிறைதோற்று - நன்றாகக் கைவண்டும் கண்வண்டும் ஒடக் கலையோட நெய்விண்ட பூங்குழலாள், நின்றொழி” கின்றாள்.

“மங்கை இடம் கடவா மாண்பினாள் ஒருத்தி, தன் பொற்கூட்டில் வைத்து வளர்க்கும் பூவைப் புள்ளோடு பேசி, அது சொல்லும் சொல் கேட்டு மகிழ்ந்து கொண்டிருக்கின்றாள். விதியில் பரமன் உலா வரவே, அவனுடைய சடாமகுடம் அவட்குக் காட்சியளித்தது. அக்காட்சியால் உள்ளம் கசிந்து கருத்திழந்து, அப்பரமனது,