பக்கம்:நல்வழிச் சிறுகதைகள்-1.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

8

நல்வழிச் சிறுகதைகள்

நோய் தீர்ந்தவுடன் புலிக்குப் பசியெடுத்தது. அத்தனை நாட்களாக ஒன்றும் தின்னாமல் இருந்த தால் பசி அதிகமாயிருந்தது. உடனடியாக ஏதாவது தின்ன வேண்டும் போலிருந்தது.

தன் நோயைத் தீர்த்தவன் என்று சிறிதுகூட எண்ணிப்பாராமல் புலி, மருத்துவன்மீது பாய்ந்தது. அவனை அறைந்து கொன்று, உடலைக் கிழித்துத் தின்றது.

நன்றிக் குணம் இல்லாத கொடிய புலிக்கு உதவி செய்த மருத்துவன் அதற்கே இரையானான்.

கருத்துரை : - கொடிய புலிக்கு உதவிய மருத்துவன் அதற்கே இரையானான்; கல்லறிவில்லாத தீயவர்களுக்குச் செய்யும் உதவிகளும் இதுபோலத் தீமையாகவே முடியும்.