இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
ஆகுமா ஆகாதா? என்ற
ஆராய்ச்சிக்குப் பேர் ஐயம்!
இந்த ஆராய்ச்சிக்குப் பேர் ஐயம்!
வேகுமா வேகாதா?
வெந்தாலும் நன்றாய் இருக்குமா?
போகுமா போகாதா?
போனாலும் நன்மை விளைக்குமா?
நம்பலாமா கூடாதா?
நம்பினால் உண்மை இருக்குமா?
செம்புப் பாலைப் போலவே
வெள்ளையாய் மனம் இருக்குமா?
ஆகுமா ஆகாதா? என்ற
ஆராய்ச்சிக்குப் பேர் ஐயம்! இந்த
ஆராய்ச்சிக்குப் பேர் ஐயம்!
9