இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
தட்டையாகத் தோன்றும் உலகம்
தட்டை யல்ல தம்பியே
உருண்டை யாக உள்ள தெனவே
உணர வேண்டும் தம்பியே.
நிலைத்த தாகத் தோன்றும் உலகம்
நிலைத்த தல்ல தம்பியே
உருண்டுருண்டு கதிரைச் சுற்றுது
உணர வேண்டும் தம்பியே.
பெரிய தாகத் தோன்றும் உலகம்
பெரிய தல்ல தம்பியே
உலகின் மிக்க பெரிது கதிரென்று
உணர வேண்டும் தம்பியே.
பகலும் இரவும் உலகைச் சேர்ந்தது
அல்ல அல்ல தம்பியே
கதிரின் ஒளியும நிழலும்அவையென்று
உணர வேண்டும் தம்பியே.
26