உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பெரிய புராண விளக்கம்-8.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

32 பெரிய புராண விளக்கம்-8 இந்தத் தலத்தைப் பற்றித் திருநாவுக்கரசு நாயனார். பாடியருளிய ஒரு திரு விருத்தம் வருமாறு: மாணிக் குயிர்பெறக் கூற்றை உதைத்தன மாவலிபால் காணிக் கிரந்தவன் காண்டற் கரியன கண்ட தொண்டர் பேணிக் கிடத்து பரவப் படுவன பேர்த்து மஃதே மாணிக்கம் ஆவன மாற்பே றுடையான் லரடியே. ' அந்த நாயனார் பாடியருளிய ஒரு திருக்குறுந் தொகை வருமாறு: " ஆலத் தார் நிழ லில் அறம் நால்வர்க்குக் கோலத் தால்உரை செய்தவன் குற்றமில் மாலுக் காரருள் செய்தவன் மாற்பேறு ஏலத் தான் தொழு வார்க்கிட்ர் இல்லையே. ” அந்த நாயனார் பாடியருளிய மற்றொரு திருக் குறுந் தொகை வருமாறு: ... ' ஏதும் ஒன்றும் அறிவில ராயினும் ஓதி அஞ்செழுத் தும்முணர் வார்கட்குப் பேதம் இன்றி அவரவர் உள்ளத்தே r மாதும் தாமும் மகிழ்வர்மாற் பேறரே. ’’ அந்த நாயன்ார் பாடியருளிய ஒரு திருத்தான் டகம் வருமாறு: - பிறப்பானைப் பிறவாத பெருமை யானைப் பெரியானை அரியானைப் பெண் ஆண் ஆய நிறத்தானை நின்மலனை நினையா தாரை நினை யானை நினைவோரை நினைவோன்தன்னை அறத்தானை அறவோனை ஐயன் தன்னை அண்ணல்தனை நண்ணரிய அமரர் ஏத்தும்