உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பெரிய புராண விளக்கம்-8.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

48 பெரிய புராண விளக்கம்-இ பிரம தீர்த்தம். தல விருட்சம் மகிழ மரம். சென்னைக்கு வடக்குத் திசையில் ஐந்து மைல் துரத்தில் உள்ளது இந்தச் சிவத்தலம். திருவிளக்குத் திருத்தொண்டு புரிந்து கொண்டு: வந்த கலிய நாயனாருடைய திருவவதாரத் தலம் இதுல் சுந்தர மூர்த்தி நாயனார் சங்கிலி நாச்சியாரைத் திருமணம் புரிந்து கொண்ட தலம் இது. அந்த நாயனார் சங்கிலி நாச்சியாருக்கு மகிழ மரத்தின் கீழ் சத்தியம் செய்து கொடுத்த இதிஹ்யத்தைப் புலப்படுத்தி இத்' காலத்திலும் மகிழடித் திருவிழா இந்தத் தலத்தில் நடைபெற்று வருகிறது. தியாகப் பெருமானுடைய ஆதிதி இப்டைப் பெற்றது. இந்தத் திருக்கோயிலுக்கு" பல சிவலிங்கங்கள் உள்ளன. புற்றிடம் கொண்டாருடைய' சந்நிதிக்கு வடக்குத் திசையில் ஆதிலிங்கம் உள்ளது. இந்த லிங்கம் மிகவும் பளபளப்பாக விளங்குகிறது. சுந்தர மூர்த்தி நாயனார், சங்கிலி நாச்சியார் ஆகிய இருவர்களு டைய உற்சவ விச்கிரகங்களும் பணவாளக் கோலத்தோடு, விளங்குகின்றன. டட்டினத்துப் பிள்ளையார் முக்தியை அடைந்த தலம் இதுவே. பட்டினத்துப் பிள்ளையா ருக்கும் திருநாவுக்கரசு நாயனாருக்கும் தனித் தனியாகத் திருக்கோயில்கள் இந்தத் தவத்தில் உள்ளன. - இந்தத் தலத்தைப் பற்றிப் பஞ்சமப் பண்ணில் திருஞான சம்பந்த மூர்த்தி நாய னார் பாடி யருளிய ஒரு டாசுரம், வருமாறு: - விடையவன் விண்ணும் மண்ணும் தொழநின்றவன் வெண்மழவாட் படையவன் பாய்புலித்தோல் உடைகோவணம் பல்கரத்தைச் சடையவன் சாமவேதன் சசிதங்கிய சங்கவெண்தோ இடையவன் ஊனம்இல்வி உறையும்மிடம் ஒற்றியூரே."