நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம்/நாச்சியார் திருமொழி/7வது திருமொழி
Appearance
7ம் திருமொழி கருப்பூரம் நாறுமோ பாஞ்சசன்யத்தைப் பற்பநாபனோடும் சுற்றமாக்கல். கலிவிருத்தம் கருப்பூரம் நாறுமோ? கமலப்பூ நாறுமோ?* திருப்பவளச் செவ்வாய்தான் தித்தித்தி ருக்கும்மோ?* மருப்பொசித்த மாதவன்றன் வாய்ச்சுவையும் நாற்றமும்* விருப்புற்றுக் கேட்கின்றேன் சொல்லாழி வெண்சங்கே. 1 கடலில் பிறந்து கருதாது* பஞ்சசனன் உடலில் வளர்ந்துபோய் ஊழியான் கைத்தலத் திடரில்* குடியேறித் தீய வசுரர்* நடலைப் படமுழங்கும் தோற்றத்தாய் நற்சங்கே! 2 தடவரை யின்மீதே சரற்கால சந்திரன்* இடையுவா வில்வந்து எழுந்தாலே போல்*நீயும் வடமதுரை யார்மன்னன் வாசுதேவன் கையில்* குடியேறி வீற்றிருந்தாய் கோலப் பெருஞ்சங்கெ. 3 சந்திர மண்டலம்போல் தாமோதரன் கையில்* அந்தர மொன்றின்றி யேறி அவன்செவியில்* மந்திரம் கொள்வாயே போலும் வலம்புரியே!* இந்திரனு முன்னோடு செல்வத்துக் கேலானே. 4 உன்னோ டுடனே யொருகடலில் வாழ்வாரை* இன்னார் இனையாரென்று எண்ணுவார் இல்லைகாண்* மன்னாகி நின்ற மதுசூதன் வாயமுதம்* பன்னாளும் உண்கின்றாய் பாஞ்சசன் னியமே. 5 போய்த்தீர்த்த மாடாதே நின்ற புணர்மருதம்* சாய்த்தீர்த்தான் கைத்தலத்தே யேறிக் குடிகொண்டு* சேய்த்தீர்த்த மாய்நின்ற செங்கண்மால் தன்னுடய* வாய்த்தீர்த்தம் பாய்ந்தாட வல்லாய் வலம்புரியே! 6 செங்கமல நாண்மலர்மேல் தேனுகரும் அன்னம்போல்* செங்கண் கருமேனி வாசுதே வனுடய* அங்கைத் தலமேறி அன்ன வசஞ்செய்யும்* சங்கரையா! உஞ்செல்வம் சால வழகியதே. 7 உண்பது சொல்லில் உலகளந்தான் வாயமுதம்* கண்படை கொள்ளில் கடல்வண்ணன் கைத்தலத்தே* பெண்படை யாருன்மேல் பெரும்பூசல் சாற்றுகின்றார்* பண்பல செய்கின்றாய் பாஞ்சசன் னியமே! 8 பதினாறா மாயிரவர் தேவிமார் பார்த்திருப்ப* மதுவாயில் கொண்டாற்போல் மாதவன்றன் வாயமுதம்* பொதுவாக உண்பதனைப் புக்குநீ யுண்டக்கால்* சிதையாரோ உன்னோடு? செல்வப் பெருஞ்சங்கே! 9 பாஞ்ச சன்னியத்தைப் பற்ப நாபனோடும்* வாய்ந்த பெருஞ்சுற்றம் ஆக்கிய வண்புதுவை* ஏய்ந்தபுகழ்ப் பட்டர்பிரான் கோதைதமிழ் ஈரைந்தும்* ஆய்ந்தேத்த வல்லார் அவரும் அணுக்கரே. 10 ஆண்டாள் திருவடிகளே சரணம்