உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பெரிய புராண விளக்கம்-8.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

24 பெரிய புராண விளக்கம்-8 முன்னால் விள்ங்கும் அழகிய முற்றத்தினுடைய. முன்றில். இல்முன் முன் பின்னாகத் தொக்க தொகை. புறத்து. வெளிப் பக்கத்தை அணைந்தார். அந்த நாயனார் அடைந்தார். இந்தப் பாடலில் குறிப்பிட்ட பாசுரம் காந்தாரப் பண்ணில் திருநாவுக்கரசு நாயனார் திருக்கச்சி ஏகம்பத்தைப் பற்றிப் பாடியருளிய, மனத்துள் வைத்த திருப்பதிக'த்தில் முதற் பாசுரமாக இருப்பது, அது வருமாறு: - கரவாடும் வன்னெஞ்சர்க் கரியானைக் கர வார்பால் விரவாடும் பெருமானை விடையேறும் வித்தக னை அரவாடச் சடைதாழ அங்கையினில் அனலேந்தி இரவாடும் பெருமானை என்மனத்தே வைத்தேனே." இந்தத் திருப்பகத்தில் வரும் இறுதிப் பாசுரம் வருமாறு: அடுத்தானை உரித்தானை அருச்சுனற்குப் பாசுபதம் கொடுத்தானைக் குலவரையே சிலையாகக் கூரம்பு தொடுத்தானைப் புரமெரியக் கனைமல்கு கயிலாயம் எடுத்தானைத் தடுத்தானை என்மனத்தே - வைத்தேனே.” பிறகு வரும் 325-ஆம் கவியின் உள்ளுறை வருமாறு: - "அந்தத் திருநாவுக்கரசு நாயனார் தம்முடைய திருக் கரங்களால் அமைந்த உழவாரத் திருத் தொண்டினையும் வேறு பல திருத் தொண்டுகளையும் அதிகமாக மிக்கு வள ரும் விருப்பத்தோடும் புரிந்து கொண்டே எல்லாச் செந் தமிழ் மொழியில் அமைந்த மாலையாகிய ஒரு திருப்பதிகத் தையும் அந்த நாயனார் பாடியருளிமையைப்போலக் கரிய நிறம் அமைந்த திருக்கழுத்தைப் பெற்றவராகிய கச்சித் திரு