உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பெரிய புராண விளக்கம்-8.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6 பெரிய புராண விளக்கம்- 8. காலை மலரும் கமலம்போல் காஞ்சி வாணர் முகமெல்லாம் சால மலர்ந்து களிசிறப்பத் தழைத்த மனங்கள் தாங்குவார். ” ஞாலம்-இந்தப் பூமண்டலத்தில் வாழும் மக்கள்; இட. ஆகுபெயர். உய்ய-உஜ்ஜீவனத்தை அடையும் வண்ணம். த்:சந்தி, திருவதிகை-திருவதிகை வீரட்டானத்தில் திருக். கோயில் கொண்டு எழுந்தருளியிருக்கும்; ஆகுபெயர். நம்பர் தம்-தம்முடைய அடியவர்களுக்குப் பல வகையான நம்பிக்கைகளை உண்டாக்குபவராகிய வீரட்டேசுவரர். தம்: அசைநிலை. அந்த நம்பிக்கைகள் இன்ன என்பதை. வேறு ஒரிடத்தில் கூறினோம்; ஆண்டுக் கண்டுணர்க. பேர் அருளினால்-வழங்கிய பெரிய திருவருளினால். சூலை-- சூலை நோயை, வயிற்று வலியை. மடுத்து-அளித்தருளி, முன்-முன்பு ஒரு காலத்தில் ஆண்ட தடுத்து ஆட்கொண்ட, தொண்டர்-திருத்தொண்டராகிய திருநாவுக்கரசு நாய னார். வர-நம்முடைய நகரமாகிய காஞ்சீபுரத்திற்கு எழுந்தருளி வர ப்:சந்தி. பெற்றோம்-அவ்வாறு எழுந் , தருளியதாகிய பாக்கியத்தை நாம் அடைந்தோம். என்று. என எண்ணி, காலை-காலை நேரத்தில். மலரும்-மலர்ச். சியை அடையும். கமலம் போல்-தாமரை மலர்களைப். போல; ஒருமை பன்மை மயக்கம். காஞ்சி-காஞ்சீபுரத்தில். வாணர்-வாழும் மக்களுடைய, ஒருமை பன்மை மயக்கம், முகம்-வதனங்கள்: ஒருமை பன்மை மயக்கம். எல்லாம்யாவும். சால-மிகவும். மலர்ந்து-மகிழ்ச்சியினால் மலர்ச் சியை அடைந்து. களி-ஆனந்தம், சிறப்ப-சிறந்து ஓங்க. த்: சந்தி. தழைத்த-இன்பம் தழைக்கப் பெற்ற. மனங்கள். திருவுள்ளங்களை. தாங்குவார்-தாங்குபவர்கள். ஆனார்கள்: ஒருமை பன்மை மயக்கம். -