உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பெரிய புராண விளக்கம்-8.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

32 பெரிய புராண விளக்கம்-இ. அவர் பாடியருளிய திருவேகம்ப வருமாறு: அன்னை எத்தனை எத்தனை அன்னையோ அப்பன் எத்தனை எத்தனை அப்பனோ பின்னை எத்தனை எத்தனை பெண்டிரோ பிள்ளை எத்தனை எத்தனை பிள்ளையோ முன்னை எத்தனை எத்தனை சென்மமோ மூடனாயடி யேனும் அறிந்தி லேன் இன்னம் எத்தனை எத்தனை சென்மமோ என் செய் வேன் கச்சி ஏகம்ப நாதனே. அவர் பாடியருளிய கச்சி திரு அகவலில் வரும் சி.ை அடிகள் வருமாறு: - " தருக்கிய காமுகர் சாரும் படுகுழி செருக்கிய காமுகர் சேரும் சிறுகுழி பெண்ணும் ஆணும் பிறக்கும் பெருவழி மலம்சொரிந் திழியும் வாயிற் கருகே கலம்சொரிந் திழியும் தண்ணிர் வாயில் இத்தை நீங்கள் இனிதென வேண்டா பச்சிலை இடினும் பத்தர்க் கிரங்கி மெச்சிச் சிவபத வீடருள் பலனை முத்தி நாதனை மூவா முதல்வனை அண்டர் அண்டமும் அனைத்துள புவனமும் கண்ட அண்ணலைக் கச்சியிற் கடவுளை ஏக நாதனை இணையடி இறைஞ்சுமின் போக மாதரைப் போற்றுதல் ஒழிந்தே. ' இரட்டைப் புலவர்கள் பாடியருளிய ஏகாம்பர நாதர் உலாவிலிருந்து சில கண்ணிகள் வருமாறு: ' ஒது திருநகரி ஒரேழினும் சிறந்த ஆதி நகர் காஞ்சி அந்நகரிற்-போதநலம் மன்னி வளர்வ தொருமாவுண் ட தனிழற்கீழ்க் கன்னிஎமை உனக்குக் காணலாம்-சொன்னபடி விருத்தம் ஒன்று.