உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பெரிய புராண விளக்கம்-8.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருநாவுக்கரசு நாயனார் புராணம் - 4球 சிவ பெருமான்களை ஒருமை பன்மை மயக்கம். தம்: அசை நிலை. த்:சந்தி. தொழுது-அந்த நாயனார் வணங்கி. போற்றி-வாழ்த்திவிட்டு. ப்:சந்தி. போய்-மேலே எழுந் தருளி. மாடு-தன்னுடைய பக்கத்தில். பெரும்-பெரிய தாக இருக்கும். கடல்-சமுத்திரத்தை. உடுத்த-சுற்றிப் பெற்ற. வான்மியூர்-திருவான்மியூருக்கு. மருங்கு-பக்கத்தை. அணைந்தார். அந்த நாயனார் அடைந்தார். பிறகு உள்ள 331-ஆம் பாடலின் கருத்து வருமாறு: "அந்தத் திருநாவுக்கரசு நாயனார் திருவான்மியூரில் திருக்கோயில் கொண்டு எழுந்தருளியிருக்கும் மருந்தீசரை அடைந்து அந்த ஈசரை வ ண ங் கி வி ட் டு ப் பக்தி யோடும் பெருமையைப் பெற்ற உண்மைகளை எடுத் துரைக்கும் செந்தமிழ் மொழியில் அமைந்த ஒரு திருப் பதிகத்தை அந்த நாயனார் பாடியருளி அந்தப் பக்கத்தில் மானிடப் பிறப்பைப் போக்கித் தந்தருளுபவராகிய சிவ பெருமானார் எழுந்தருளியிருக்கும் பல ஆலயங்களுக்கு அந்த நாயனார் எழுந்தருளி அந்தத் தலங்களில் எழுந்தருளி யிருக்கும் சிவ பெருமான்களை வணங்கிவிட்டு, செந்தமிழ் மொழிக்கு அரசராகிய அந்தத் திருநாவுக்கரசு நாயனார் நறுமணம் நிறைந்திருக்கும் மலர்கள் மலர்ந்துள்ள பலவகை யான மரங்கள் வளர்ந்து நிற்கும் பூம் பொழில் சூழ்ந்த திரு மயிலாப்பூருக்கு எழுந்தருளிச் சேர்ந்தார்." பாடல் வருமாறு: திருவான்மி யூர்மருந்தைச் சேர்ந்துபணிங் தன்பினொடும் பெருவாய்மைத் தமிழ்பாடி அம்மருங்கு பிறப்பறுத்துத் தருவார்தம் கோயில்பல சார்ந்திறைஞ்சித் தமிழ்வேந்தர் மருவாரும் மலர்ச்சோலை மயிலாப்பூர் வந்தடைந்தார். ’’