உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பெரிய புராண விளக்கம்-8.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருந்ாவுக்கரசு நாயனார் புராணம் 4? கற்கொடிமா லைகள்பூசம் . நறுங்கதலி கிரைநாட்டிப் பொற்குடங்கள் தூபங்கள் தீபங்கள் பொலிவித்து மற்றவரை எதிர்கொண்டு கொடுபுக்கார் வழித்தொண்டர். ' *# , . வழி- ஆதிபுரீசுவரருக்குப் பரம்பரை பரம்பரையாக ஆத்:சந்தி,தொண்டர்-திருத்தொண்டர்களாக இருக்கும்மக்கள் : ஒருமை பன்மை மயக்கம். ஒற்றியூர்-திருஒற்றியூராகிய, வள" செல்வவளத்தைப் பெற்ற நகரத்து-அந்தப் பெரிய தலத்தில் ஒளி-பிரகாசத்தை வீசும். மணி-அழகிய விதிகள்-திருவீதி களை விளக்கி-துடைப்பங்களால் பெருக்கிச் சுத்தம் செய்து. தல்-நல்ல. கொடி-துவசங்களையும்; ஒருமை பன்மை மயக் கம். மாலைகள்-மலர் மாலைகளையும். பூசம்-கமுக மரங் களையும்; ஒருமை பன்மை மயக்கம். நறும்-நறு மணம் கமழும். கதவி-வாழை மரங்களினுடைய ஒருமை பன்மை மயக்கம். நிரை-வரிசையை. நாட்டி-வரிசை வரிசையாக நட்டு வைத்து. ப்: சந்தி, பொன்-தங்கத்தால் செய்யப் பெற்ற. குடங்கள்-பூரண கும்பங்களையும். தாபங்கள்தாபக் கால்களையும்; ஆகு பெயர். தீபங்கள்-திருவிளக்குக் களையும். பொலிவித்து-அந்தத் தொண்டர்கள் வைத்து விளங்குமாறு செய்து, மற்று: அசை நிலை. அவரை-அந்தத் .திருநாவுக்கரசு நாயனாரை. எதிர்கொண்டு-எதிர்கொண்டு வரவேற்று. புக்கார்-ஆதிபுரீசுவரருடைய திருக்கோயிலுக் .குள் நுழைந்தார்கள்; ஒருமை பன்மை மயக்கம். இந்தப் பாடலில் விற்பூட்டுப் பொருள்கோள் அமைந்தி திருக்கிறது. . திருவொற்றியூர்: இது தொண்டை நாட்டில் சென்னை அருகில் உள்ளது. இங்கே கோயில் கொண்டிருப்பவருடைய திருநாமங்கள் மாணிக்கத் த்யாகர், படம்பக்க நாதர், ஆதி விபுரீசுவரர் என்பவை. அம்பிகை வடிவுடையம்மை. தீர்த்தம்