இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
சூறை யடிக்கும் பேய்க் காற்று—களி
துள்ளச் சிரித்திடும் கூற்று
ஆறு புரண்டிடும் வெள்ளம்—வளர்
அன்பு புரடதெம் முள்ளம்
வானகம் பார்த்து நடுங்கும்—கொடும்
மாமலைப் பாம்பும் ஒடுங்கும்
கானகப் பேரிருள் தன்னில்—உயர்
காதலால் வந்தயெம் கண்ணில்
பார்வையிற் பட்டதும் இருளே—எட்டிப்
பற்றிக் கை தொட்டதும் இருளே
ஆர்வக் கனலொளி தன்னால்—உந்த
ஆற்றைக் குறுகினோம் முன்னால்
தந்தை இருள் மனக் கோவம்—அனல்
தாக்கக் குலைந்தனள் பாவம்
சிந்தைத் துணிவினால் வந்தாள்—புலி
சீறும் புயலினை நொந்தாள்
ஓடம் வலிப்பவர் இல்லை—பொங்கும்
உன்மத்த வெள்ளத்தின் தொல்லை
நாடும் புயவலி நன்றே—மலர்
நங்கைநீ வந்திடு என்றே
82