பக்கம்:ஏழாவது வாசல்.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நீர்மேல் நடந்தவர்  39

எழுந்தான். கண்களில் ஒளி தவழ. “சுவாமி, நான் சித்தியடைந்து விட்டேன். நீர் மேல் நடக்கும் வல்லமையைப் பெற்றிருக்கிறேன். பார்க்கிறீர்களா? நடந்து காட்டவா?” என்று படபடவென்று கேட்டான்.

மகானுக்கு அவன் சொன்ன செய்தி மகிழ்ச்சியளிக்கவில்லை. “சே! பதினான்கு ஆண்டுகள் தவம் செய்து பெற்ற பயன் இது தானா? உண்மையில் நீ பெற்ற சித்தி ஒரு தம்பிடி தான் பெறும். நீ பதினான்கு ஆண்டு கடுந்தவம் செய்து பெற்ற பலனை, சாதாரண மக்கள் ஓடக்காரனுக்கு ஒரு தம்பிடி கொடுத்துப் பெற்று விடுகின்றனர், தெரியுமா?” என்று கேட்டார்.

அந்த மனிதன் தன் தவற்றையுணர்ந்தான். தன் தவம் வீணானதை அறிந்தான். அன்று முதல் அதிசயங்களில் ஆசை வைப்பதை நிறுத்தி விட்டான்.

உண்மையான பெரியார்கள் அதிசயங்களைப் போற்றுவதில்லை. அவற்றை அவர்கள் வெறுக்கிறார்கள், அதிசயங்களால் மக்களுக்கு யாதொரு பயனுமில்லை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஏழாவது_வாசல்.pdf/41&oldid=993886" இலிருந்து மீள்விக்கப்பட்டது