45
டாகவாவது மதிற்கதவை உடைத்து உள்ளே புகலாமா என்று எண்ணினான். மதிலின்மேல் தன் வீரர்களை ஏறச்செய்து உள்ளே குதித்துக் கோட்டைக் கதவைத் திறக்கச் செய்யலாமா என்று யோசித்தான்.
திடீரென்று அவனுக்கு ஒரு வழி தோன்றியது. அது நிறைவேறினால் உள்ளே உள்ள மக்களுக்கு நன்மை உண்டாகும். பெரும் புலவரும் நல்லமைச்சருமாகிய கோவூர் கிழாரைக் கோட்டைக்குள் அனுப்பி நெடுங்கிள்ளிக்கு அறிவுரை கூறும்படி செய்யலாம் என்பதே அவன் நினைத்த வழி. பகை வேந்தர்கள் போரிட்டுக்கொண்டிருந்தாலும் புலவர்கள் அவர்களைப் போர்க்களத்திலே சென்று பார்ப்பதுண்டு. ஓர் ஊரிலே உள்ள புலவர் அந்த ஊருக்குரிய மன்னனுடைய பகைவன் இருக்கும் ஊருக்குச் செல்லலாம். அந்தப் பகை மன்னன் புலவருக்கு வேண்டிய உபசாரங்கள் செய்வான். ஒரு நாட்டுப் படைத் தலைவனை, அமைச்சனை போர் நிகழும் காலத்தில் பகை நாட்டுக்குள் அகப்பட்டால் மீண்டு வரமுடியாது. ஆனால் ஒரு நாட்டிலே வாழும் புலவன், பகை நாட்டுக்குச் செல்லலாம். புலவன் யாருக்கும் பகைவன் அல்லன். போர் நிகழ்ந்தால் போரிடும் வேந்தர்களுக்கிடையே சந்து செய்விக்க முயல்வார்கள் புலவர்கள். தமிழ் மக்கள் அரசனைத் தெய்வத்தைப் போல எண்ணி மதித்தார்கள். மன்னனுடைய பதவிதான் நாட்டிலே மிக மிக உயர்ந்த பதவி. ஆனால் மன்னர்களைக் காட்டிலும் உயர்ந்தவர்களாகப் புலவர்களை மதித்தனர். புலவர்கள்