பக்கம்:இளந்தமிழன்–1சனவரி1973-இதழ்4.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கத்திடும் தவளைக் கூட்டம் கலங்கல் நீர்க் குட்டை தன்னில் தொத்திடும் ஒன்றை யொன்று தொடர்ந்திடும் மேலும் ஒன்று வித்திடும் வித்த கந்தான் கோசிகச் செம்மல் போலப் புத்துல கிழைக்கத் தானே! . புதுமையோ! வாழ்வின் பேருே! என்றவா றெண்ணி யாங்கே இருந்தனள் ஒருத்தி நங்கை கன்னலும் வெட்கிப் போகும் கழையெனும் தோள்கள் காணின் அன்னமும் நாணிச் சோரும் அணிநடை சாயல் கண்டால்; மின்னலும் வடிவம் தோற்றும்; மின்னிடை தோற்றல் இன்ரும்! கன்னலோ! கனியோ! தேனே! கட்டியோ! கண்டு தானே! பொன்னவிர் ஆம்பல் செவ்வாய் பொழிந்திடும் மொழிகள் எல்லாம்! பின்னலோ நீண்ட பாம்பு பிறந்ததோ முகத்தை யொட்டி, இன்னதன் அழகு தானும் இளமதிக் கிரணம் மானும் கன்னிகர் தோளார் கண்டால் கன்னியை அகலல் செய்யார்; பின்னவர் அகல்வ ராயின் பேடியர் இவரே என்பார்; என்னதான் இருந்தும் என்ன இளையவன் இல்லா தாட்கே? அன்னம தூர்தி கொண்டான் அளித்ததீ விதியாம் அந்தோ! சின்மொழிப் பேதைக் கிள்ளே சில்வளே துறந்தாள் இன்னே சின்மலர்க் கூந்தல் காரில் சிதைந்ததால் பூவும் பின்னே. பொன்னிப் பல்பூ ஆடை வெண்ணிறங் கண்ட தாலே இன்புகொள் தவளே கண்டே இகுக்கிருள் ஊமைக் கண்ணிர்.