பக்கம்:மனமும் அதன் விளக்கமும்.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

90 மனமும் அதன் விளக்கமும் கருத இடமளித்தது. ஒருவன் தன் வாழ்க்கையிலே வெற்றி காணுது தோல்வியடைந்த முயற்சிகளுக்கு ஈடு செய்யவே நரம்புக் கோளாறுகளும், கனவுகளும், பொய்க் கற்பனைகளும் தோன்றுகின்றன என்று யுங் கருதினர். லிபிடோ என்பதை பிராய்டைவிட மிக விரிவான பொருளில் இவர் வழங்கினர். நரம்புக் கோளாறுகளை வெளியுலக அனுபவங்க ளி ன் வாயிலாக மட்டும் இவர் விளக்குவதில்லை. ஒரு மனித னுடைய தனித்தன்மை வெளியுலக வெற்றி தோல்வி களால் மட்டும் முன்னேற்றமடைவதில்லை என்றும் ஆன்மிக முன்னேற்றமும் அதற்குக் காரணம் என்றும் அவர் எண்ணினர். மேலைநாட்டு உளவியல் அறிஞர்கள் சடப்பொருளை மட்டும் ஆராய்ந்தார்கள். கீழ்நாட்டு யோகிகள் சடப்பொருளை மாயை என்று விலக்கிவிட்டு ஆன்மாவுக்கே முக்கியத்துவம் கொடுத்தார்கள். ஒருவ னுடைய மனம் நல்ல முறையில் அமையவேண்டு மாளுல் இந்த இரண்டுமே மிக முக்கியம் என்று யுங் வலியுறுத்துஇருர், 'நன்கு பண்பட்டு வளர்ந்த மனித ைெருவனுக்கு நனவு மனம் மிக விரிந்திருக்கவேண்டும். அவனுடைய நனவிலி மனம் மிகமிகச் சுருங்கி இருக்க வேண்டும்' என்று யுங் கூறியுள்ளார். ஒரு மனிதன் ஆரோக்கியமான மனத்தோடுகூடி இருக்கவேண்டுமானல் மதம் மிக முக்கியம் என்றும் யுங் கருதினர். மதமே ஒருவனுடைய ஆன்மிகத் தேவைகளை நிறைவேற்றுகிறது. மதப் பற்றுடைய வாழ்க்கை குறைந்து வருவதாலேயே மனத்திலே அமைதியின்மையும், மனக்கோளாறுகளும் பெருகி வருகின்றன என்று யுங் அழுத்தமாகக் கூறினர். மனிதன் எதேச்சையாகத் திரிந்து வாழ்வதற்காகப் படைக்கப்பட்டவன். அவன் இப்பொழுது பெரிய