உள்ளடக்கத்துக்குச் செல்

நான்மணிக்குறள்/ அறன் வலியுறுத்தல்

விக்கிமூலம் இலிருந்து
                                    4. அறன் வலியுறுத்தல்                        
     
                             1) உலகுனக்குச் செய்ய விழைவதைநீ, செய்தல்
                               நலமாம் அறனென்று நாட்டு.
                             2) அறம்போல் உயிர்கட் குதவுவதொன் றில்லை
                               திறம்பட நாளும்அதைச் செய்.
                             
                             3) மாசில் மனமே அறக்கடவுள் கோயிலென்று
                               நேசமுடன் நன்னெறியில் நில். 
                             4) எல்லாத் துணையும் அறனே! அதைமறத்தல்
                                பொல்லாப்புக் கூடும் புகுந்து.
                             5) செய்க அறனே, பிறவிச் சுழலறுத்தே
                                உய்க உலகில் உயர்ந்து.
                             6) அறத்தாலே இவ்வையம் ஆனதே அஃதை
                                மறப்பததன் வீழ்ச்சிக்கு வித்து.
                             7) அறனெனும் செங்கோலே அண்டமெலாம் ஆளும்
                                பிறவெல்லாம் பெற்றி இல.
                              8) பூதஙள் ஐந்தும் புலனைந்தும் புட்கலனும்
                                போதமாய்க் கொண்டபுவ னம்.  
                              9) அறவடிவன் ஆன்ற இறைவடிவன் அன்னான்
                                திறஞ்சொலல் செஞ்சொல்நூல் செப்பு.
                              10) அண்டபகி ரண்டங்கள் ஆள்வ தறமேகாண்!
                                  கண்டிடுதல் ஞானக் காட்சி.