பக்கம்:பாரதித் தமிழ்.pdf/111

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

112

பாரதி தமிழ்




  குறிப்பு:- பாரதியார் இப்பாடலை சானெட் (Sonnet) என்று தலைப்பில் கூறுகிறார். இதுவும் அடுத்த பாடலும் Sonnet 1,11 என்று ஆங்கிலத்திலேயே குறிப்பிடப்பட்டுள்ளன. சானெட் என்பது நம் நாட்டு யாப்புவகை அல்ல. இது மேல்நாட்டு யாப்புவகை. இது முதலில் இத்தாலி மொழியில் தோன்றிப் பிறகு இதன் சிறப்பின் காரணமாக ஐரோப்பிய மொழிகள் பலவற்றிலும் ஏற்றுக் கொள்ளப்பட்டது என்று கூறுவார்கள்.
  சானெட் பதினன்கு வரிகள் கொண்டது. இந்த யாப்பின் அமைப்பிற்குத் தனிப்பட்ட இலக்கணம் கூறப்பட்டிருக்கிறது. பாரதியார் எழுதியிருக்கும் இப்பாடலில் பதினன்கு வரிகள் உள்ளன. சந்திரிகை என்ற பாடலில் பதினன்கு வரிகளோடு தனிச் சொற்கள் இரண்டிடங்களில் வருகின்றன. வரிக் கணக்கைத் தவிர வேறு வகையில் மேல்நாட்டு இலக்கணம் தமிழ்ப் பாடலில் இல்லை. ஏனெனில் அந்நாட்டு யாப்பு முறையும் தமிழ் யாப்பு முறையும் வேருனவை.

ஆங்கிலத்திலே ஷேக்ஸ்பியர் முதலிய பல சிறந்த கவிஞர்கள் அமிர்த்துவம் பெற்ற சிறந்த சானெட்டுக்க்ளை இயற்றியுள்ளார்கள். அவற்றைப் படித்துப் பாரதியார் பெரிதும் மகிழ்ந்திருக்க வேண்டும்.அதனுலே இந்த யாப்பு முறையைத் தமிழில் புகுத்த அவர் விரும்பியிருக்கிறார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாரதித்_தமிழ்.pdf/111&oldid=1539930" இலிருந்து மீள்விக்கப்பட்டது