பக்கம்:பாரதித் தமிழ்.pdf/428

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கால விளக்கு 429.

தின் ப்ரதிநிதியாக என்னை மதித்து நான் உங்க ளோடு பேசவில்லை. (இந்தியாவாகிய) நாகரிகத்தின் ஊற்றை நோக்கி நீஞ்சி வந்தவகை என்னை மதிக் கிறேன்’ என்றார்.

இவர் யார்? ப்ரான்ஸ் தேசத்து முதல் மந்திரி யாக இருந்து அதி ஸமீப காலத்தில் விலகியவர். வெறும் இலக்கியப் படிப்பு மட்டும் உடையவரல்லர். மிகவும் பழுத்த லெளகிகத் தேர்ச்சியும், ஐரோப்பிய ராஜ தந்த்ரத்தில் மஹாகீர்த்தி வாய்ந்த நிபுணத் தன்மையு முடையவர். இவரே பத்து வருஷங் களுக்கு முந்தி இவ்விதமாகப் பேசியிருக்கமாட்டார். இரண்டு வருஷங்களுக்கு முன் இப்படிப் பேசியிருக்க மாட்டார். நினைத்துக்கூட இருக்கமாட்டார். ஐரோப்பிய நாகரிகமே மேம்பட்டதென்று நினைத் திருப்பார். இன்றைக்கு இந்தியாவை வந்து கூடிய வரை நிஷ்பrபாதமான, தெளிந்த விழிகளுடன் பார்க்கும்போது, இந்த எண்ணம் இவர்மீது வற் புறுத்தப் படுகிறது. இவருடைய வசனத்தை நன்றாக ஊன்றிப் படிக்கும்படி நம்மவர்களை வேண்டுகிறேன். இவர் என்ன சொல்லுகிறார்? ஐரோப்பிய நாகரிகத் தின் பரம லக்ஷயங்கள் அவர்கள் எதிர்காலத்தில் நிறைவேற்றக் கருதும் தர்மங்கள், ஐரோப்பாவுக்கு சொந்தமல்ல வென்றும் அவை கீழ்த்திசையி லிருந்தே கிடைத்தன வென்றும் சொல்லுகிரு.ர். நாமே ஐரோப்பாவுக்கு லசஷ்ய தானம் செய்தோ மென்றும் நம்முதவியின்றி அவர்கள் இன்னும் பச்சை குத்திய நிர்வாணமான காட்டு ஜனங்களா கவே யிருந்திருப்பார்களென்றும் அங்கீகரித்துக் கொள்ளுகிறார். ஆசியாவிலிருந்து நாகரிகம் ஐரோப் பாவுக்குச் சென்றது. ஆசியாவின் நாகரிகத்துக்கு மூல ஸ்தானம் நமது பாரத வர்ஷம். ஆளுல் முற்காலத்தில் நாம் எத்தனை உயர்ந்த நிலைமையி லிருந்து உலகத்திற்கு எத்தனே அரிய நலங்கள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாரதித்_தமிழ்.pdf/428&oldid=605855" இலிருந்து மீள்விக்கப்பட்டது