பக்கம்:திரும்பி வந்த மான் குட்டி.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

34 ❖

திரும்பி வந்த மான் குட்டி



நகராமலே நிற்பேன். என்னை யாரு கேட்கிறது?” என்று சொல்லிவிட்டு, வேண்டுமென்றே மிக மிக மெதுவாக நடந்தான்; இல்லை, நகர்ந்தான்.

பொன்னனைப் பயமுறுத்துவதற்காக அந்த டிரைவர், காரை அவன் அருகிலே கொண்டுபோய், அவன் முதுகிலே மெல்ல ஓர் இடி இடித்தார். முதுகிலே கார் இடித்ததும், பொன்னன் பயந்து போனான். அப்படியே ஒரு துள்ளுத்துள்ளிப் பக்கத்திலே தாவினான். அப்போது அவன் கால் சறுக்கிக் கீழே விழுந்துவிட்டான். விழுந்த இடத்திலே கிடந்த கல்லிலே அடிபட்டு இரத்தம் குபுகுபுவென்று வெளியே வந்தது.

உடனே, கூட்டம் கூடிவிட்டது.

“நல்லா வேணும் இந்தப் பையனுக்கு. எவ்வளவு நேரமா ஹாரன் அடிச்சாரு! வழியை மறைச்சுக் கிட்டு நகரவே இல்லியே” என்று அங்கேயிருந்த கடைக்காரர்கள் பேசிக்கொண்டார்கள்.

அடிபட்ட பொன்னனைக் காரிலே தூக்கிப் போட் டுக்கொண்டு, அந்தக் கார் டிரைவரும் அதன் உள்ளேயிருந்த இருவரும் பக்கத்திலேயிருந்த ஓர் ஆஸ்பத்திரிக்குக் கொண்டு போனார்கள்.

“நல்லவேளை, தலையிலே ஒண்ணும் அடியில்லை. நெத்தியிலேதான் கல் குத்தியிருக்கு”