பக்கம்:கலைஞரைப் பற்றி உவமைக் கவிஞர்.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

38.ஒரு பேரொளியின் பயணமிது 39.சுருளு மீசைக்காரனடி வேலுத்தம்பி-வீரன் வேலுத்தம்பி 1988 40.ஆற அமரக் கொஞ்சம் யோசிச்சுப்பாரு-மக்கள் ஆணையிட்டால் 1988

(கலைஞர் திரை இசைப் பாடல்கள்தொகுப்பு :சிலோன் விஜயேந்திரன்) சிறந்த தமிழறிஞராக விளங்கிய தமிழ்க்கடல் இராய. சொக்கலிங்கம் 30.10.1898இல் பிறந்திருக்கிறார். 'ஊழியன்' வார இதழின் ஆசிரியராகவும் விளங்கியிருக்கிறார்.கலைஞரும் முரசொலி,முத்தாரம் முதலிய இதழ்களின் ஆசிரியராகப் பணியாற்றியிருக்கிறார்,சிறந்த தமிழறிஞராகவும் திகழ்கின்றார்.

இயக்கத்தைக் கட்டிக் காப்பவர் ஓர் இயக்கத்தைத் திறம்படக் கட்டிக் காத்து வழி நடத்திய ஆற்றல்மிகு தலைவராக விளங்கிய முத்துராமலிங்கத் தேவர் அவர்கள் 30.10.1908இல் பிறந்தார். அறிஞர் அண்ணா அவர்களால் தோற்றுவிக்கப்பட்ட திராவிட முன்னேற்றக் கழகத்தை, அவருக்குப் பிறகு வழிநடத்திச் செல்லும் வரலாற்று நாயகராக கலைஞரும் விளங்குகிறார்.