உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வீரர் உலகம்.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2 - வீரர் உலகம்

போருக்குச் சென்று வெற்றியும் புகழும் பெற்று வருமாறு அனுப்புகிருர்கள்.

பகைவன் பல காலமாகச் செய்து வரும் தீமைகளே எத்தனை நாட்களாகப் பொறுக்க முடியும்? இப்பொழுது நாட்டினர் துணிந்துவிட்டார்கள், எப்படியாவது பகையைக் கருவறுத்து வெற்றியை நிலைநாட்ட வேண்டுமென்று. தலைவர்கள் உறுதிமொழி கூறிவிட்டார்கள். அரசன் போர் முரசு கொட்டிவிட்டான். 'வீரர் வருக! காளேயர் வருக! விடலைகள் வருக! ஆண் சிங்கங்கள் வருக! பகையை ஒழிக்கப் படைக்கலன் ஏந்தும் பண்பினர் வருக! தோள்வலி மிக்க சூரர்கள் வருக! சீறி எழும்பும் தீரர்கள்

o

- வருக!" என்று முலைக்கு மூலே அந்த முரசின் பேரொலி

கேட்கிறது. - .

போர் தொடங்கிலுைம் அறத்தை மறந்து விடவில்லை அரசன். பகைவர்கள் கொடுமை செய்தாலும், பகை நாட்டில் நல்லவர்களும் இருக்கிருர்கள்; பெரியவர்கள் வாழ்கிருர்கள்; பெண்கள் இருக்கிருர்கள்; பிணியுடைய வர்கள் இருக்கிருர்கள்; பசுமாடுகள் உள்ளன. நாடு முழுவதையும் அழித்துப் பொடிபடுத்தலாம். ஆனல் இந்த அப்பாவிகளே அழிக்கலாமா? அதனல் முரசு அறையும்போது வீரக்குரலோடு அறக்குரலும் உடன் முழங்குகிறது. பகை நாட்டில் உள்ள நல்லவர்களுக்கு எச்சரிக்கை அது.

"நாங்கள் படையுடன் வருகிருேம். போர் மூளப் போகிறது. எங்களுக்கு நல்லவர்களிடம் பகை இல்லை. அவர்களையும் பலம் இல்லாதவர்களையும் போரில் அழிக்க எங்களுக்கு விருப்பம் இல்லை. அவர்களே இப்போதே எச்சரிக்கை செய்கிருேம். அவரவர்கள் தங்கள் தங்களுக்கு ஏற்ற பாதுகாப்பைத் தேடிக் கொள்ளுவதற்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வீரர்_உலகம்.pdf/9&oldid=647978" இலிருந்து மீள்விக்கப்பட்டது