உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நேருவும் குழந்தைகளும்.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அவரை நோக்கி ஓடி வந்தான். அவனைப் பார்த்த தும் நேரு அங்கேயே நின்றுவிட்டார். சிறுவன் அவரிடம் ஒரு கையெழுத்துப் புத்த கத்தை நீட்டினன். கையெழுத்துப் போடும்படி கேட்டான். நேரு புன்னகையுடன் ஆங்கிலத்தில் கையெழுத்துப் போட்டார். உடனே அவன். அதில் தேதியும் போடும்படி கேட்டான். அவர் தேதியை உருதுவில் எழுதினர். " மாமா , ஆங்கிலத்தில் கையெழுத்துப் போட்டுத் தேதியை மட்டும் உருதுவில் போட் டிருக்கிறீர்களே! ஏன்?’ என்று சிறுவன் கேட்டான். அதற்கு நேரு, முதலில் நீ ைஸ ன் (கையெழுத்து) "போடுங்கள்” என்ருய், பிறகு, தாரீக் (தேதி) போடுங்கள்” என்ருய்: லைன்’ என்பது ஆங்கிலச் சொல். தாரீக்' என்பது உருதுச் சொல். ஆகையால்தான் கையெழுத்தை ஆங்கிலத் திலும்,தேதியை உருதுவிலும்போட்டேன்”என்ருர். உடனே சிறுவன் சிரித்தான். நேருவும் அவ னுடன் சேர்ந்து சிரித்தார். சிறுமியின் கூச்சம் அமெரிக்கா சென்றிருந்தபோது, வாஷிங்டன் நகரில் சில குழந்தைகள் நேருவைச் சந்தித்தார்கள். அவர்கள் எல்லோருமே சின்னஞ்சிறு குழந்தைகள். அவர்களைப் பார்த்ததும் நேருவின் ஆனந்தம் அளவு கடந்துவிட்டது. ஒரு சிறுமியைத் தூக்கி முதுகிலே வைத்துக் கொண்டார். குதிரை போல் தாவித்தாவிக் குதித்தார். இன்னுெரு சிறுவன மேலே தூக்கி எறிந்து பிடித்தார். உடனே , அங்கிருந்த குழந்தைகள்