உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இதழ்கள்.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இதழ்கள்

85

5

இதழ்கள் § உனக்காகத் கரை மேலே காத்திட்டிருந்தா ஆத்தா. இதா பாரம்மான்னு கையிலே புடிச்சுக்கிட்டு ஒடினேன். என் கிட்டேயிருந்து புடுங்கி கூடையிலே போட்டுக்கிட்டு ஆத்தா என்னை அப்படியே இஸ்து கட்டி அணைச்சுக்கிட்டது. அந்த மீனு ஆம்பிட்டா நொம்ப நொம்ப அதிஸ்டமாம்பா!' (நம்ப அதிஸ்டம்தான் தெரிஞ்சிருக்குதே இண்ணைக்கு. இண்ணய சண்டையே அதிலே ருந்துதானே மொேைாச்சுது. இண்ணக்கி விரிச்ச வலை கனமாயிருக்குதேன்னு இஸ்தா பொத்தக்கூடையும் கோரைக் கொடியும்தான் ஆம்புட்டிச்சு, கட்டை மரத்துலே எட்டு மைல் போய் என்னடா கொண்டு வந்தேன்னா, பொத்தைக் கூடையும் கோரைக் கொடியும்னு சொல்லுதா? வெறுங்கையை வீசிட்டு வந்துட்டாயாக்கும் ஆம்புள்ளைதான் போன்னு மாட்டிக்கிட்டாயா சண்டைக்கு. குப்பத்து வஸ்தாதிங்கள்ளாம் ஒரு கெண்டைக்குத் தத்தானம் போட்டபோது, சுறாவும் எறாவுமா போர் போராக் கொண்டு வந்ததெல்லாம் இண்ணய ஒரு நாள் வெறும் வலையிலே துடைச்சிப் போச்சு, ஆம்பிள்ளைங்க பொளப்பே இவ்வளவு தானே? விளக்கு மொளச்ச வேளைக்குத் தண்ணி மேலே போனா, வெள்ளி மொளைக்கிற வேளைக்கு உசிரோடவோ முளுசாவோ திரும்பி வரது நிச்சயமில்லே. இந்தப் பொளப்பு அப்டி, உசிரே கொடுத்து உசிர் புடிச்சுக் கொணாந்தா கரை மேலே வெசவு கொடுத்து வாங்கிப்பாங்க. வாங்கி கடேலே போய் வித்து வித்து, கைக்கும் காலுக்கும் பொன்னும் வெள்ளியுமா வாங்கி வாங்கிப் பூட்டிக்கிறப்போ அந்த புருஸ்ன்காரன் வேண்டித்தான் நிக்கிது. என்னமோ ஒரு நாளிக்கு வெறும் கையோட வந்துாட்டேன்னாம்.) “என்னாப்பா மொண மொணன்றியே?! வேர்க்கடலை துண்றேன், போடா!' ‘’ என்னப்பா கோவம் பண்ணிக்கிறியே, எனக்குக் கொடுக்காம துண்ணமாட்டே. எனக்குத் தெரியாதா?” பாறைகள் விட்டுப் போய் உருகும் பயங்கர இன்பம். அப்பா ஒரு நாளைக்கு கூட்டிப் போறேன்னியே!” காங்கே?'

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இதழ்கள்.pdf/85&oldid=1247183" இலிருந்து மீள்விக்கப்பட்டது