இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
22
இந்திய சமுதாய.../விருந்தோம்பல் பண்பாடு
பெண்ணும் இச்சை கொண்டு, வாழத் தலைப்படத் தொடங்கியதும், ஓரளவில் அது ஒருவன்-ஒருத்தி என்ற ஒழுங்கில் வரலாயிற்று. ஆனால் திருமணம் என்ற அழுத்தமான வரையறை இல்லை.
மகாபாரதத்தில், ‘சுவேத கேது’ என்பவரால் திருமண நெறி அழுத்தமாக்கப்பட்டதாக வரலாற்றைக் குறிக்கிறார்.
சுவேதகேதுவின் அன்னையை, ஒரு ருஷி விரும்பி உறவு கொள்ள அழைத்துச் சென்றார். இது, சுவேதகேதுவின் தந்தையின் முன்னிலையில் நடந்தது. ஆனால் தந்தைக்கு இது விரோதமாகப் படவில்லை. விரும்பியவர் கூடலுக்கு அழைத்துச் செல்லலாம் என்பது சமுதாயம் ஒப்புக் கொண்ட தர்மமாக இருந்தது.
அப்போது, சுவேதகேது, இத்தகைய நடைமுறைக்கு முடிவு கட்டுவதாக உறுதி பூண்டார். பின்னர், அவர் ருஷி என்ற நிலைக்கு ஏற்றம் கண்டு, புதிய முறையான ‘திருமணம்’ என்ற நடை முறையைக் கொண்டு வந்தார் என்பதேயாம்.