பக்கம்:இந்திய இலக்கியச் சிற்பிகள் வரிசை-ஔவை. சு. துரைசாமிப் பிள்ளை.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



பேராசிரியப் பெருந்தகை

31

நேரம் ஆற்றிய அவ்ஒலி, இன்றும் செவி மடுத்தோர்தம் செவிகளில் ரீங்காரம் செய்து கொண்டிருக்கிறது. இதன்பின்னர், அன்னையார் பல்வேறு இலக்கியக் கூட்டங்களிலும் சமய மாநாடுகளிலும் அரியவுரையாற்றியுள்ளார். உரைவேந்தரிடம் தமிழையும் சைவ சித்தாந்தத்தையும் பயின்ற பான்மையினால்தான் இன்றும், தியாகராசர் கலைக் கல்லூரியில்- திங்கள் தவறாமல் சைவ சமயச் சொல்பொழிவுகளைத் தக்க அறிஞர்கள் வாயிலாக நடாத்தி வருகின்றார்! மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம் பிள்ளைக்கு ஒரு சாமிநாத ஐயர் வாய்த்ததுபோல, உரைவேந்தருக்குக் கலையன்னையார் வாய்த்தது தமிழுக்கும் சைவத்துக்கும் ஆக்கமெனலாம்!

தியாகராசர் கல்லூரியில் உரைவேந்தர்பால் பயின்று வெளியேறியோர், பிற்காலத்தில் பேராசிரியர்களாக-கவிஞர்களாக- அரசியல் வித்தகர்களாக விளங்கினர்; விளங்கி வருகின்றனர். ஆசிரியத் துறையில் உரைவேந்தர் எய்திய உயர்வு, இயல்பாக அமைந்த வளர்ச்சியேயாகும். ஆசிரியர்க்கு உரிய அரிய பண்புகள் அனைத்தும், இவருக்கு இயற்கையிலேயே இனிதமைந்திருந்தன.

இவ்வகையில் உரைவேந்தரைப் 'பேராசிரியப் பெருந்தகை' என்று போற்றுவது சாலப் பொருந்தும் எனலாம்.