இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
மூன்றும் ஆறும் & 52 எந்திரங்கள் கணக்காயர் இடத்தையெலாம் கைப்பற்ற வந்தாலும் வரலாம்; - வரச்செய்வான் விஞ்ஞானி! சாதி சமயங்கள் சாத்திரங்கள் கோத்திரங்கள் ஏதுங் கருதாமல் இன்றைக்குக் கலப்புமணம் மெதுவாய் நடக்கின்ற மேன்மைத் திறனறிந்து பொதுவாய் வியப்போம் நாம்; பூரிப்போம்; இதனைவிட மண்ணுலக மகனொருவன் மாலைப் பொழுதினிலே விண்ணுலகில் ஏறி விளையாடப் போகுங்கால் செவ்வாய் தனைத்திறந்து சிரித்துப்பூங் கையசைத்துச் செவ்வாய்க் கிரகத்துச் சிங்காரி ஒருத்திவரக் கண்டு மனத்துடிப்பைக் கண்மூலங் காட்டிக், கற் கண்டு மொழியாளின் காதலையும் பெற்றுப்பின் முதிய வயதுடையோர் முன்னின்று வாழ்த்துரைக்கப் புதிய கலப்புமண்ம் புரியத் தொடங்குகின்ற