பக்கம்:தமிழ் நாடக வரலாறு.pdf/123

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் நாடக வரலாறு 121

கிராமதேவதைகளுக்குக் காப்புக் கட்டுதற்கு முன்பே, இக் கலைஞர்கள் ஒப்பந்தம் செய்யப்படுவார்கள். தொகை கூடுதல் குறைவாக இருந்தாலும், ஆட்டுக்கடா, கோழிக்கறி, மீன்கறி, எண்ணெய் முழுக்கு, எந்தெந்த நாளில் என்பதும், தினசரி கள்ளுக்குடங்கள் வழங்கவேண்டும் என்பதும், ஒப்பந் தத்தின் முக்கிய அம்சமாக இருக்கும்.

ஒரு ஊரில் நாடகம் போடப் பாக்கு வாங்கிவிட்டால், அதாவது ஒப்பந்தம் செய்துவிட்டால், அந்தத் தேதிகளில் வேறு ஊர்களுக்குத் தொகை எத்தனை அதிகமாகக் கொடுப்ப தாக அழைத்தாலும், பணத்திற்காக ஒப்பந்தத்திலிருந்து

மாறவே மாட்டார்கள்.

இத் தெருக்கூத்துக் கலையில் மிகப்பெரும் புகழ்வாய்ந்த நட்சத்திரக் கலைஞர்கள் பலர் அக்காலத்தில் இருந்தார்கள். ஒலி பெருக்கியே இல்லாத அந்தக் காலத்தில், கம்பீரமும், அழுத்தமும், அசுரத்தனமான ஆற்றல் மிக்க குரல் வலிமை யும் கொண்ட அவர்களின் பாடல்கள், சுற்று வட்டாரத்தில் பல மைல் தூரம் வரை எதிரொலிக்கும். .

இதயத்தை உலுக்கி ஈர்க்கும் இக்கலைஞர்களின் பாடல் களைக் கேட்பதற்காக, வயல் வரப்புகளையெல்லாம்தாண்டிப் பல மைல்களைக் கடந்து சென்று, மிகச் சிறு வயதிலேயே கண்டு களித்திருந்தேன்.

இத் துறையில் நட்சத்திரக் கலைஞர்களாகத் திகழ்ந்து, நானே கண்டு ரசித்த சிலரை நினைவு கூர்ந்து உரைக்கக் கடமைப்பட்டவனாவேன்.

முத்துகுமரப் பத்தர், சக்திவேல் ஆச்சாரி, கொல்லுப் பட்டி சொக்கன், ஆறுமுகம் சேர்வை, மூக்கவேளார், சண் முகசுந்தரப் புலவர், முட்டம் பக்கிரி, கார்குமிழி கோவிந்த சாமி, பெருஞ்சேரி நடேசன், சன்னாவூர் செல்லம், சோழம் பேட்டை சின்னத்துரை, வழுவூர் தேனாம்பாள் ஆகிய பல

த.நா.-8