உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:முதுமைக் காலத் தொல்லை பூச்சிகளினால் ஏற்படும் தொல்லை நீங்கி நலமுடன் வாழலாம்.pdf/5

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாம்புகள் கடித்தால்
பயப்படாதீர்கள்!

நாம் வாழும் நாடு,பெரிய மலைகள்,குன்றுகள், காடுகள், அடர்ந்த பசுஞ்சோலைகள், பசுமையான வயல் வெளிகள், மரம், செடிகொடிகள் நிறைந்த பகுதிகளைக் கொண்ட உலகம்.

இப்படிப்பட்ட உலகத்தில் அந்தந்த இடங்களுக்கு ஏற்றபடி காட்டு மிருகங்கள், பறவைகள், புழு பூச்சிகள், பாம்புப் புற்றுகள், வகை வகையான பாம்பு இனங்கள், விஷ ஜந்துகள் வாழ்ந்து கொண்டுதான் இன்றும் இருக்கின்றன.

அந்த விஷ ஜந்துகளிலே ஒன்று பாம்பு இனங்கள் பாம்பு இனத்திலே பல வகைகள் உண்டு. இன்றைய உலகத்தில், எல்லா நாடுகளிலும் 3500-க்கும் மேற்பட்ட பாம்பு வகைகள் இருப்பதாகக் கணக்கு எடுத்திருக்கிறார்கள் உலக மருத்துவர்கள்.

இவ்வளவு பாம்புகளிலும் ஐந்து வகை பாம்புகளுக்குத்தான், மனிதனை அந்தப் பாம்புகள் கடித்தால் மரணம் அடைந்து விடுகின்ற விஷ ங்கள் இருப்பதாகக் கூறுகிறார்கள்.

அந்த வகையான பாம்புகளைக் கண்டுதான் மக்கள் பயப்பட ஆரம்பித்தார்கள்.

அதனால்தான். பாம்பு என்றதும் ராஜாக்களுடைய படைகள் எல்லாம் பயப்படும் நிலை ஏற்பட்டிருக்கிறது.

பொதுவாகவே பாம்பு என்றால், மக்கள் மத்தியிலே பயம் ஏற்படும். அச்சமும், அதன் விளைவால் உருவாகும் ஆபத்துக்களையும் உணரும் மரண பயமும் உருவானது.