82 முன்மாதிரியே கன்மாதிரி தன்மதிப்பு, கிதானம், மனவலிமை, பி ற ர் உணர்ச்சியை மதித்தல் முதலிய கற்பண்புகளைப் பழக்கத்தில் கொண்டுவரல் வேண்டும். இவற்றை கேரடியாகக் கற்பிப்பது எளிதன்று. இந்தச் சந்தர்ப்பங்களில் பெரியவர்கள் கடந்துகொள்ளும் முறையைக் கொண்டே குழந்தைகள் இக்குணங் களே மறைமுகமாகப் பயில்கின்றன. கேரடிக் கண் டிப்பில் கட்டாயம் செய்வதால் எதிர்ப்பு உணர்வே வளரும். எனவே, முன்மாதிரியே நன்மாதிரி. குழந்தைகளிடம் கட்டுப்பாட்டுடன் கடந்து கொள்வதன் கோக்கம் அவர்கள் தங்களைக் காத்துக் கொள்வதற்கான வழியைக் கற்றுக் கொள்வ தற்கே. மனித வாழ்க்கையில் பகைமையும் கோப மும் பலக்குறைவைக் காட்டும் கணங்கள். இதல்ை முன்னேற்றம் தடைப்படுவதன்றித் தோல்வியும் அவமானமும் ஏற்படுகின்றன. எனவே மனத்தைக் கட்டுப்படுத்திச் செயல்களைச் செய்யக் குழந்தை களை ஊக்குவித்தல் வேண்டும். பயிற்சியும் பயனும் கடவுள் அன்பு மயம்; அன்பே சிவம்'. குழங் தையின் பிஞ்சு மனத்தை இயற்கையில் புதைந்து கிடக்கும் அழகைக் காணவும் அதைச் சுவைக்கவும் பயிற்றுவித்தல் வேண்டும். இயற்கையின் அழகில் மரம், இலை, பூ, பூச்சிகள், பறவைகள்-இவற்றின் அமைப்பில் எல்லாம் கடவுளின் அளவற்ற ஆற்ற லும் உயர்வும் தெரிகின்றன. இவை மனித வாழ்க்
பக்கம்:மங்கல மனைமாட்சி.pdf/83
Appearance