32 இத்தகு சிறப்புவாய்ந்த அத்தித்திக்கும் திருக் குறள் அறத்துப்பால், பொருட்பால், காமத்துப் பால் என்னும் முப்பால் உடையது. அம் முப் பாலுள் முதற்பாலாக இருப்பது அறத்துப்பால். அவ்வறத்துப்பாலுள் முதல் கான்கு அதிகாரங்கள் பாயிரம், பாயிரம் என்ருல் முகவுரை எ ன் று பொருள். முகவுரை முடிந்ததும் நூல் தொடங்கு கிறது. எவ்வாறு தொடங்குகிறது ? எந்த அதி காரங்களைக் கொண்டு தொடங்குகிறது? இல் வாழ்க்கை, வாழ்க்கைத் துணைநலம், மக்கட்பேறு என்ற மூன்று அதிகாரங்களைக் கொண்டு தொடங் குகிறது. ஆம். தெய்வ ப் புலவர் திருவள்ளுவரின் பொய்யாமொழிக்கு ஆதியாய் அமைந்த மூன்று அதிகாரங்கள் இலவாழ்க்கையும் வாழ்க் கைத் துணைகலமும், மக்கட்பேறும் ! என் னே மனை மாட்சியின் மாட்சி என்னே இல்லறமே கல்லற மாம் மாண்பு ! இனி இந்த மூன்று அதிகாரத்தில் ஒவ்வொரு அதிகாரத்தில் இருந்தும் ஒரு குறளை மட்டுமேனும் ஈண்டு கினைவுபடுத்தி மகிழ்வோம். இல்வாழ்க்கை என்ற அதிகாரத்துள் ஐந்தாவ தாக-நடுநாயகமாக விளங்கு ம் அருமைப்பா டுடைய ஒரு திருக்குறள் உண்டு. அது, அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை பண்பும் பயனும் அது. (45)
பக்கம்:மங்கல மனைமாட்சி.pdf/33
Appearance