உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மாயூரம் வேதநாயகம் பிள்ளை.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

# 6 மாயூரம் வேதநாயகம் பிள்ளை

"ஐயா, நான் படிக்க வேண்டுமா? எனக்கு இருக்கிற சொந்தப் புத்தி போதாதா? ஏழைகள் குடும்ப சீவனம் நடத்திட கல்வி அவசியம்தான்். அதற்காகநானும் படிக்கவேண்டுமா?"ஏதாவது படிக்க, எழுத அவசியம் நேரிட்டால்' அதற்குத்தான்் கணக்குப் பிள்ளைகள் இருக்கிறார்களே, போதாதா?" என்றேன்.

நான் இதை எனது சொந்தப் புத்தியால் கூறவில்லை. எனது பாட்டி அடிக்கடி இந்த வார்த்தைகளைச் சொல்லியிருப்பதைக் கேட்டவன் நான். அதனால் இப்படிக் கூறிவிட்டேன். இதைக் கேட்ட எனது தந்தை ஒரே மகிழ்ச்சியடைந்தார். என்னமோ நான் எனது சொந்த புத்தியால், கம்பீரமாக, தைரியமாக, சாதுரியமாக, சாமர்த்தியமாகப் பேசிவிட்டதாக எனது தந்தை, உற்றார். உறவினர், தாயார், பாட்டி உட்பட அனவைருமே ஆச்சரியப்பட்டு என்னை முத்தமிட்டு ஆரவாரம் செய்து அவர்கள் மகிழ்ச்சி பெற்றார்கள்."

என்னுடைய பாட்டியாரும் என்னைக் கட்டித்துக்கிக் கொண்டு, என் கண்ணே, பொன்னே! இவ்வளவு சாமர்த்தியாகப் பேச யாருக்காவது வருமா?" என்று நான் மூச்சுக்கூட விடமுடியாதபடி இடமில்லாமல், வாயாலும், பல்லாலும் பல முத்தங்கள் கொடுத்தாள்' எப்படிப்பட்ட நகைக்சுவையோடு பேசுகிறார் முதலியார்? பார்த்தீர்களா?

வேதநாயகம் பணக்காரர் வீட்டிலே தான்் பிறந்தார்! ஆன்ால், அவரது வளர்ப்பு அப்படியில்லை. பெற்றதாயான ஆரோக்கிய மரியம்மாள் தனது மகனின் கல்வி வளர்ச்சியிலே மிக அக்கறை யுடன் கவனம் செலுத்தினார். தகப்பனாரும் தனது மகனை மிகவும் அருமையாக வளர்த்து, அக்கறை காட்டினார்.

பெற்றோர் இருவரும் இவ்வாறு அன்பு பாராட்டி அருமையாக வேதநாயகத்தை வளர்த்ததால், அவரும் நலமான உடலுடன், கனிவான உள்ளத்துடன், மதிநுட்பத்துடன், குணமாண்புடன் வளர்ந்தார்.