总4 மாயூரம் வேதநாயகம் பிள்ளை
வழக்குரைஞர்கள் நியாயத்தை நிரூபிக்கவில்லை என்று அநியாயமாய்த் தீர்ப்புச் செய்வதுமாய் இருந்தார்கள்.
மற்றும் சிலர் அட்டாவதான்ம் செய்வது போல, பல வியாச்சி பங்களை ஒரே காலத்தில் விசாரிக்கத் தொடங்கி, எதையும் முடிக்காமல், அரையும் குறையுமாய்த் தீர்த்து வந்தார்கள்.
மேலும் அவர்கள், விசாரணைக் கெடுவை ஒத்தி வைத்து, காலதாமதம் செய்து, கட்சிக்காரரை மனத்துண்டிறுத்தி வருத்தி வந்தார்கள். குட்டிச்சுவரிலே தேள் கொட்டதண்ணீரி பானையிலே நெறி கட்டினது போல, நியாயம் ஒரு பக்கம் இருக்க, வேறொரு பக்கத்திலே நீதிபதிகள் இருந்து கொண்டு, அதற்கனுகூலமாகச் சாட்சிகளை அதட்டி, உருட்டி வாக்கு மூலம் வாங்கி, எக்கச் சக்கமாய்த் தீர்ப்பு அளித்து வந்தார்கள்.
தீர்க்க தரிசிகள் போல் சிலர், வழக்காளிகளைப் பார்த்த மாத்திரத்திலே தப்பான எண்ணங் கொண்டு அதற்குத்தக்கப்படி சாதக பாதகஞ் செய்து வந்தார்கள். செப்பிடு வித்தைக்காரர் செப்பையும் பந்தையும் ஒரு கணத்திலே மாற்றுவது போல, சில நீதிபதிகள் ஒருவருடைய அனுபவ சுதந்திரங்களை அநியாயம் செய்து வந்தார்கள்.
சென்ற தலைமுறையிலே நீதிபதிகள் போன்ற உயர் அதிகாரிகள் உத்தியோகம் புரிந்த ஒழுங்கை வேதநாயகம் பிள்ளை விவரிக்கின்றார். இவர் பணியாற்றிய காலத்திலே நீதிபதிகள் எவ்வளவு முறைகேடர்களாக நடந்தார்கள் என்பதை முன்பு பார்த்தோம். இவர்களே அல்லாமல், நீதி மன்ற அதிகாரிகள் எப்படி நடந்தார்கள்?
இலஞ்சமும் ஊழலும் அவர்கள் இடையே எவ்வாறு நிரம்பி மலிந்து கிடந்தன? வழக்கறிஞர்கள் நியாயத்தை வாதித்தார்களா? அவர்கள் ஏன் ஆங்கிலத்திலே வாதிக்க வேண்டும்?