48 மாயூரம் வேதநாயகம் பிள்ளை
இவனுக்கு இந்த மமதை ஏன்? அகம்பாவம் எதற்கு? மனிதன் தன்னைத் தான்் அறிவானானால், அவன் ஒரு நாளும் கருவப் பட மாட்டான் இறுமாந்திரான்.
நம்முடைய தேகத்தின் அசுத்தங்களையும். ஆசாபாசங் களையும், சித்த விகாரங்களையும், நமக்குள் உண்டாகிற வியாதிகளையும் நாம் யோசிப் போமானால் வெட்கப்பட்டு நாம் தலை குனிய வேண்டியதே அல்லாமல் கருவப் படுவதற்கு என்ன இடம் இருக்கிறது?
அசுத்தத்திலே பிறந்து அசுத்தத்திலே வளர்ந்து, அசுத்தத்திலே இறந்து போகிறோம். இரத்தமும், மாமிசமும், எலும்பும், நரம்பும் கூடிய நம்முடைய தேகம் அசுத்தமே அன்றி வேறல்ல; ஏன் இந்த அகம் பாவம்? கண்ணிலே பீளை, காதிலே குறும்பி, மூக்கிலே சளி, வாயிலே எச்சில் - இப்படித் தேகம் முழுவதும் துர் நாற்றம்.
நம்முடைய வாழ்வும் தாழ்வும், ஆண்டவன் கையில் இருக்கின்றனவே அல்லாமல் - நம்முடைய இச்சையிலே என்ன இருக்கிறது? அடுத்த நிமிடம் இன்னது வரும் என்பது நமக்குத் தெரியுமா? ஆஸ்திகளை நினைத்து கருவப் படுவோமானால் அவை அதித்தியம். பிறக்கும் போது ஒன்றும் கொண்டு வந்ததில்லை. எத்தனை நாள் இவை நம்மோடு கூடியிருக்கும் என்பதும் நிச்சயமில்லை.
கல்வியைப் பற்றி இறுமாப்பு அடைவோமானால், அது, பிறர்போதித்ததே அன்றி, நம்மோடு கூடப்பிறந்தது அல்லவே!. எவன் தன்னைத் தான்ே உயர்த்திக் கொள்கிறானோ, அவன் தாழ்த்தப் படுவான். எவன் தன்னைத் தான்ே தாழ்த்துகிறானோ, அவன் உயர்த்தப்படுவான்.
மேற்குலம் என்று பெருமை பேசுவதும், ஏழைகள் என்று பிறரை இகழ்வதும் கூடாது. அது பாவம் குணமும் புத்தியும் சிரேட்டமே.