பக்கம்:ஹிராடெடஸின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

52

ஹிராடெடஸின்


மாற்றுவதில்லை என்றும் வாக்களித்தார்கள். அதனால் குழப்பமடைந்திருந்தார்கள்.

சார்டிஸ் நகருக்கு வருகை தந்திருந்த சோலானை, குரோசஸ் மன்னன் மகிழ்ச்சியுடன் வரவேற்று உபசரித்தார். பிறகு சில நாட்கள் கழித்து, குரோசஸ் தம் காவலர்கள் மூலமாகத் தனது கருவூலத்தை அவருக்குக் காட்டுமாறு கட்டளையிட்டார்.

சோலான் அவற்றை எல்லாம் பார்வையிட்ட பிறகு, ‘குரோசஸ், ஐயா! எனது கருவூலத்தை நன்றாகப் பார்த்திருப்பீர்கள். இந்த உலகத்தில் நீங்கள் பார்த்தவர்களுள் யார் மிக்க மகிழ்ச்சியுடன் இருப்பவர்?’ என்ற கேள்வியைக் கேட்டார். இவ்வளவு செல்வத்துடன் தாம் ஒருவர்தான் உலகத்தில் இருப்பதாக எண்ணிய மனக் கர்வத்தால் அவர் அந்தக் கேள்வியைக் கேட்டுள்ளார் என்பதைச் சோலான் புரிந்து கொண்டார்.

மன்னனது மனதைத் தெரிந்து கொண்ட குரோசஸ், அவரது கருவூலத்தைப் பற்றிக் கருத்துக் கூற மறுத்து விட்டார். அதற்கு மாறாக, ‘டெல்லாஸ் என்ற ஏதென்ஸ் குடிமகனே மிகுந்த மகிழ்ச்சியுடன் இருப்பவர்’ என்றார்.

அதிர்ச்சியடைந்த மன்னன், ‘இவ்வாறு நீங்கள் சொல்வதற்கு என்ன காரணம்’ என்றார்?

அதற்கு இரண்டு காரணங்கள் உள்ளன என்றார். உடனே அந்த மன்னன், தனக்கு இரண்டாவது இடத்தையாவது தரமாட்டாரா? என எண்ணி, ‘ஐயா அவருக்கு அடுத்தப் படியாக இருக்கின்ற இரண்டாவது அதிருஷ்டசாலி யார்?’ என்று கேட்டார்.

‘இரண்டாவது அதிருஷ்டசாலி ஆர்கோஸ் நகரத்திலே உள்ள இரண்டு பேர்’ என்றார் சோலான். அப்போதும் தனக்கு இரண்டாவது இடம் கிடைக்கவில்லை என்று கவலைப் பட்ட குரோசஸ், ‘அதற்கு என்ன காரணம்’ என்று கேட்டார்.