நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்
23
தேவி கவியுள்ளம் நாயுடுவை கவர்ந்து விட்டதும் ஒரு காரணமாகும்.
நாயுடுவுக்கு உடன் பிறந்த ஆண் மக்கள் இருவர்: அவர்கள். துரைசாமி நாயுடு; கோவிந்தராஜுலு நாயுடு என்பவராவர்; பெண்மக்கள் ஐவர்; அவர்கள் அம்மணி, ஜானகி, சின்னம்மாள், தாயாரம்மாள், செல்லம்மாள் என்பர்களாவர்.
பாஷியகாரலு நாயுடுவுக்கு மொத்தம் எட்டுக் குழந்தைகள்! அதனால், அவர் வருவாயில் முக்கால் பங்குக்கு மேல் தமது மக்களது கல்விக்காக செலவழிக்க வேண்டி கட்டாய நிலை ஏற்பட்டது.
நாயுடுவுக்கு பதினெட்டாம் வயதிலேயே முதல் திருமணம் நடந்து விட்டது; பெண், நாயுடு ஜாதி; பெயர் சாராதாம்பாள்; பதின்மூன்றாம் வயதிலேயே அந்தப் பெண் சாவு என்ற தீரா நோய்க்குப் பலியானாள்!
மருத்துவத் துறையில் நாயுடுக்கு நல்ல பெயருண்டு; காரணம், நோயாளிகளை இன்முகம் காட்டி, பேசி, வரவேற்றுப் பழகுவார். என்ன நோய்; எப்படி வந்தது; என்ற காரணங்களை எல்லாம் கேட்டு; தக்க மருந்துகளைத் தருவதில் வல்லவர், நல்லவர் என்ற பெயர் பெற்றிருந்தார்!
ஏழைகளுக்குக் கருணை காட்டி, பரிவு கூர்ந்து, செல்வர்களுக்கு அன்பு காட்டி உளமாரப் பழகும் பண்பால், அவரது மருத்துவத் தொண்டு புகழ்பெற்றது; தொழிலும் ஓங்கியது; மக்களும் அவரைப் பாராட்டினர்.
குடும்பப் பாசத்துடன் சகோதர சகோதரிகளோடு நெருக்க உறவு கொண்டு அவர் பழகுவார் நேர்மையான உள்ளம்; கண்டிக்கும் நெஞ்சுரம்; தவறைத் தட்டிக் கேட்டுத் திருத்தும் பண்பு; அநியாயம் கண்டவிடத்துக் கேட்-