பக்கம்:கவியரசர் இரவீந்திரநாத் தாகூர்.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

என்.வி.கலைமணி

39


ரவீந்திரரின் எல்லா அண்ணன்மார்களும், அண்ணியார்களும், மகிழ்ச்சியடைந்தார்கள்.

அந்த நூல், வங்காளத்து மக்களிடையே பெரும் பரபரப்புடன், விற்றது. ஒவ்வொரு இசைக் கலைஞர்களும் அந்த நூலைப் பாராட்டி மகிழ்ந்து போற்றினார்கள். விற்பனையும் அதிகமானது. வங்க மக்களின் இலக்கிய அறிவாளர்கள் பலர் அந்நூலின் சொற்சுவை, பொருட்சுவை, இசை நயச்சுவை அனைத்தையும் வாயார வாழ்த்தியது மட்டுமின்றி, ‘வங்காளத்தின் ஷெல்லி’ என்று தாகூரை மனம் திறந்து பாராட்டினார்கள். இசை உலகுக்கு அன்று வரை கிடைக்காத ஒரு இசைப் பாடல் தொகுப்பு நூற் புதையல் ஒன்று கிடைத்ததாக எல்லாகும் வியந்தார்கள்!

கல்கத்தா நகரில் புகழ் பெற்ற ஒரு குடும்பத்தினரின் திருமணம் நடைபெற்றது. அந்த திருமண வீட்டார் புகழ்பெற்ற வங்கக் கவிஞரான தாகூருக்கும் அழைப்பு அனுப்பி, அவரை நேரிடையாகச் சென்று வரவேற்றார்கள். காரணம், வங்கத்தில் புதிதாகப் புகழ்பெற்றுவரும் ஓர் இளையதலைமுறைக் கவிஞர் தமது திருமண நிகழ்ச்சியில் கலந்து வாழ்த்துவது மண வீட்டார்களுக்கும் பெருமை அல்லவா? அதனால் தாகூரை நேரில் சென்று இரு வீட்டாரும் அழைத்தார்கள்.

அந்த அழைப்பை ஏற்று வங்கக் கவிஞர் தாகூர் சென்றிருந்தார். அவரை அமோகமாக இரு வீட்டாரும் வரவேற்று அமரச் செய்தார்கள்.

அப்போது, வங்க மொழி மக்கள் இடையே மிகச் சிறந்த நாவலாசிரியர் என்று புகழ் பெற்றிருந்தவர் பங்கிம் சந்திர சட்டர்ஜி, அவரையும் திருமண வீட்டார் நேரில் சென்று