உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கார்ல் மார்க்ஸின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தம்மை மேம்படுத்தும் எண்ணங்கன் 2.

இம்மூன்று மதங்களுக்குப்பிறகு ஆயிரத்து முன்னுாறு ஆண்டுகளுக்கு முன்பு தோன்றிய இஸ்லாம் மதத்திற்கு வழிகாட்டியாக வாழ்ந்தவர் நபிகள் நாயகம்.

இந்த நான்கு மதங்களும் உலகப் பெரும் பகுதிகளில் வாழ்கின்றன! தங்களது வழிகாட்டிகள் கூறிச் சென்ற நெறிகளை அந்தந்த நாடுகளிலே உள்ள பாதிரிமார்கள், ஹாஜிக்கள், லாமாக்கள், ஜெயின் குருக்கள் அனைவரும் தலைவர்களாக நின்றுப் பணியாற்றி, தத்தமது குறிக் கோள்களோடு ஆந்த நெறிகளை இன்றும் வளர்த்து வரு வதைப் பார்க்கின்றோம். தீர்க்கதரிசிகள் கர்ம வீரர்களல்ல.

இந்த வரலாற்றுக்குறிப்புகளை நாம் ஆழ்ந்து நோக்கும் போது, தீர்க்கத்தரிசிகள் எல்லோரும் கர்மவீரர்களாக இருக்க வேண்டும் என்பதில்லை! மக்களுக்கும் கூறவேண்டி பதைக் கூறிவிட்டு அவர்களும் மறைந்து விடுகிறார்கள்:

மக்களுக்குரிய நெறிகளைக் சொல்லிவிட்டு, அவற்றை எந்தெந்த குறிக்கோள்களோடு வளர்க்க வேண்டும் என்ற வழிகளையும் காட்டி விட்டாலே போதுமானது. அதற் காக வேறு வேறு தலைவர்கள் தேர்வு செய்யப்பட்டு அவர்கள் அந்தந்த மக்களை அன்றாடம் வழி நடத்து கிறார்கள்,

இவர்களைப் போலவே, கார்ல் மார்க்கம் ஒரு வழி காட்டியாகவே வாழ்ந்தார்: புதுப்புதுக் கருத்துக்களின் :பிரிவுகளோடு அந்தந்த மதங்களும் கருவாக உயிர்த்தது போல், மார்க்சினுடைய மார்க்சியம் அன்றுவரை உலகு உணராத புதுக்கருத்தாகவே தோற்றுவித்தார்!. அவர் அதற்கு வழிகாட்டியாக வாழ்ந்ததோடு தனது கருத்தை மக்க்ள் இடையே வழி நடத்தியும் சென்றவர் மார்க்ஸ்.

கா-2