உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கார்ல் மார்க்ஸின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்.pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மேடைகள் ஏறி அவர் முழக்கமிட்ட ஒவ்வொரு கூட்டத்திலும் அதற்குரிய விடைகளை விளக்கமளித்துப்பேசியவர் மார்க்ஸ்.

'முதலாளித்துவம் வீழ்த்தப்பட்டு, உற்பத்திச் சாதனங்கள் எல்லாம் அரசுடைமை ஆக்கப்பட்ட மக்களது சமுதாய அமைப்புதான் சோசலிசம்' என்று பதிலளித்தார் மார்க்ஸ்!

அத்தகைய ஒர் அற்புதச் சிந்தனையாளர்தான் தத்துவ ஞானிதான்-இங்கே உயிரற்ற உடலாகச் சாய்ந்து கிடக் கின்றார்!

எல்லார்க்கும் எல்லாம் இருக்கின்ற இடம் நோக்கி இந்த வையம் நடக்க வேண்டும் என்று ஆசைப்பட்டவர் தான் இந்த மாக்ஸ் என்ற மேதை!

இவரது கனவு என்று நனவாகி, சமதர்மம் என்ற பூந்தோட்டத்தில் மக்களது வளவாழ்வு. நலவாழ்வு என்ற பூக்கள் பூத்துப் புதுமண்ம் வீசுகின்றதோ-ஆந்த நன்நாள் தான் சோசலிசம் மலர்ச்சி பெற்ற நாளாகும்.

டார்வினும்; மார்க்சும்

எவ்வாறு மனிதன் படிப்படியாக வளர்ந்தான் என்ற மனிதகுல பரிணாம வளர்ச்சியை; டார்வின் என்ற மேதை கண்டு பிடித்தான்!

மனிதகுல வரலாறு எவ்வாறு கால நிலைகளுக்கு ஏற்றவாறு வளர்ச்சிப் பெற்றது; என்பதைக் கண்டுணர்ந்த மாமேதை மார்க்ஸ்!

அந்த வரலாற்துணர்வுடைய பேராசிரியர்தான். இதோ நாம் புடை சூழ மரணமெனும் மஞ்சத்திலே துயில் கொண்டு இருக்கிறார்!

மரண மாதா அவரைத் தாலாட்டிக் கொண்டிருந்த இறுதிக் கட்டத்தில், சுமார் இரண்டே இரண்டு நிமிட