உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மருத்துவ விஞ்ஞானிகள்.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

புலவர் என்.வி. கலைமணி

67


கழகத்தின் மதப் பிரிவுத் துறையில் சேர்ந்து படிக்குமாறு அவர் அறிவுறுத்தி வந்தார். ஆஸ்லர் தனது 18-வது வயதில் டொரோண்டோ பல்கலைக் கழக்ததில் சேர்ந்தார். அங்கேதான் ஜேம்ஸ் பவல் பேராசிரியராகப் பணி புரிந்தார்.

ஆஸ்லர் 1867-ஆம் ஆண்டில், டொரோண்டா பல்கலைக் கழகத்தில் கிறித்துவ மதப் போதனை சம்பந்தப்பட்ட சமயத் துறை பிரிவில் சேர்ந்து படித்து வந்தார்.

ஜேம்ஸ் பவல் என்ற மருத்துவப் பேராசிரியருடைய தொடர்பு அவருக்குக் கல்லூரி வாழ்க்கையில் ஏற்பட்டதாலும், மருத்துவ, விஞ்ஞான ஆராய்ச்சியைப் பவலுடன் சேர்ந்து செய்து வந்த பழக்கத்தாலும், ஆஸ்லருக்கு மதத் துறைக் கல்வி மீது அவ்வளவாக விருப்பம் உண்டாகவில்லை.

பல்கலைக் கழக நேரத்தின் பெரும்பகுதியை ஜேம்ஸ் பவல் என்ற பேராசிரியருடன் சேர்ந்து விஞ்ஞான ஆராய்ச்சியிலேயே ஈடுபட்டு வந்தார் ஆஸ்லர்!

பேராசிரியர் ஜேம்ஸ் பவல் ஆராய்ச்சித் துணையோடு, நுண்பெருக்கி ஆடியில் பொருளை வைத்து ஆராய்ந்து கண்ட உண்மைகளைப் பேராசிரியரிடம் கூறுவார்.

அவர் மதக் கல்வி மீது நாட்டம் கொள்ளாமல், விஞ்ஞானத் துறையில், அதிலும் மருத்துவ விஞ்ஞானத் துறையில் - தனது அறிவைச் செலுத்தி, அதற்கான கல்வியை ஏற்றுக் கற்று வந்தார்.

ஜேம்ஸ் பவலும், ஆஸ்லரை மருத்துவ விஞ்ஞானத்தையே படிக்குமாறு துண்டி விட்டார். அதனால் ஆஸ்லர் மதத் துறைக் கல்வியை விட்டு வெளியேறி, மருத்துவ விஞ்ஞானத்தில் சேர்ந்து படித்தார்.