20 மக்கள் நெஞ்சில் எம்.ஜி.ஆர். யார், யார், எப்படியெப்படி வாழ்ந்தார்கள் என்பதின் எதிரொலியே அது!
மழைத் துளியைச் சிப்பி தனது வயிற்றுக்குள் ஏற்றுக் கொள்வதைப் போல - மனிதாபிமானத்தைத் தனது இதயத்துள் ஏற்று நடந்த ஒருவர், கல்லறைக் கோட்டத்துள் புகுந்தால், அங்கே கணிதம் மணக்கும்! அது மனிதாலயமாகவும் மாறும்! உலகம் உவந்து ஏற்றிப் போற்றிடும் தேவாலயமாகவும் அது மதிக்கப்படும் - உணரப்படும் மனிதனும் தெய்வமாகலாமே!
'வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும் தெய்வத்துள் வைக்கப் படும்' - என்ற வள்ளுவப் பெம்மானின் வாழ்வியல் தத்துவம்
பொய்யாகுமா?
அதற்கான காட்சியே, இந்த எம்.ஜி.ஆரின் தாமரைக் கோட்டம்! அந்தச் சின்னம் இப்போது கூம்பியத் தாமரையாகக் காட்சி தருகின்றது!
எதிர்காலத்தில் என்று அது மலருமோ... அன்றும் அது எழிலார்ந்த தோற்றத்தைப் பொலிந்து கொண்டிருக்கும் அல்லவா?
நான் எழுதுவதை நீங்கள் படித்துக் கொண்டிருக் கின்றபோது, நாடு கடத்தப்பட்ட ஒருவனின் நலிங்கிய உள்ளம், இந்த எழுத்துக்களில் இருக்குமோ என்று எதிர்பார்க்காதீர்கள்:
வாழ்க்கைத் திட்டுக்கள் மண்ணிலே உண்டு! சாக்கடல், மக்கட் கடலிலேயும் உண்டு.
கல்லறை உயர்ச்சி தேவையா? 'இந்து' மதத்தினர், அதை ஈஸ்வரன் அருள்' என்பர்! 'இஸ்லாமியர்', அல்லாஹ் பிச்சை என்பர்! 'கிறித்தவர், கர்த்தர் 'கருணை என்பர். 'பெளத்தர்', அதைக் கெளதமனின் 'ஒட்டில் ஒட்டாத புளியம்பழமான மாண்புறு எண் வழிகள்’ என்பர்!