தமிழஞ்சலி காலம் ஒன்றுதான் எந்தக் காம்பிலே முளைக்கிறதோ - அந்தக் காம்பிலே இதுவரை முளைத்துக் கொண்டி ருப்பதாகும். காலம் தாயின் மார்பைப் போல் ஒர் அமுதக் குடம், முதல் பிள்ளை வளரும்வரை, அது உழைத்து, இரண்டாவது பிள்ளை வருகிறவரை, அது சுருங்கிக் காத்துக் கொண்டிருக்கிறது. அண்ணா இருந்தார் என்பதற்கும் - இறந்தார் என் பதற்கும் - பலருக்கு வித்தியாசமே தெரியவில்லை. இருந்தாரும்-இறந்தாரும் ஒன்று போலத் தெரிந்தாலும் இருந்தார் என்றால், ஒரு காலத்தில் இருந்தவர் என்றும், இறந்தார் என்றால் - இப்போது இல்லாதவர் என்றும் பொருளாகும். இன்னும் நூறாண்டுகட்குப் பிறகு, இறந்தார் என்றா லும் - அப்போதும், இல்லாதவர் என்பதுதான் பொருளா கும். அப்படியானால், அண்ணா எல்லா ஊழிக் காலத்திற் கும் இருக்கிறார் என்றுதான் பொருளே தவிர, ஊழியை விட்டே ஒதுங்கிவிட்டார் என்பதல்ல. அண்ணா, ஒரு வியப்பான கலவை! அதைக் கலந்தவன் எங்கும் கலந்தவன்! அவனை நோக்கி ஓடுகின்ற ஆத்மாக்கள் அண்ணாவிடம் தங்கி, இளைப்பாறிவிட்டே செல் வேண்டும். } {}
பக்கம்:தமிழஞ்சலி.pdf/20
Appearance