உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மருத்துவ விஞ்ஞானிகள்.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

புலவர் என்.வி. கலைமணி

55




லிஸ்டரின் இந்த முயற்சி வெற்றி பெற்று. நாளாகவாக, அவர்களும் - நிர்வாகமும் லிஸ்டரைப் பின்பற்ற ஆரம்பித்தனர். நற் பெயர் பெற்று நோயாளிகளை மரணத்திலே இருந்து மீட்டார்கள். பழைமை விரும்பிகள், மன கர்விகள், மூர்க்கத்தன மானவர்கள் எல்லோரும் மாறி விட்டார்கள். லிஸ்டர் வழிகளையே அவர்கள் பின்பற்றி வந்தார்கள்.

உலகம் முழுவதும் உள்ள எல்லா மருத்துவர்களும், மருத்துவ மனைகளும், எந்த வித எதிர்ப்புகளையும் எழுப்பாமல், ஜோசப் லிஸ்டரின் ஆண்டி செப்டிக் சர்ஜரி முறையைப் பின்பற்றினார்கள். அதனால் அவரது புகழ் அவனியெல்லாம் பரவியது.

அமெரிக்க விருது

ஜோசப் லிஸ்டர் தனது அறுவை சிகிச்சைக்குரிய புதிய புதிய ஆராய்ச்சிளை மேலும் மேலும் செய்துகொண்டே இருந்தார்.

அமெரிக்க அரசு லிஸ்டரை அழைத்தது. சிறப்பு விருந்தினராக லிஸ்டர் அமெரிக்கா சென்றார். அவரை அந்த அரசு அமோகமாக வரவேற்றுக் கவுரவித்தது.

1883-ஆம் ஆண்டில், இங்கிலாந்து ராணி, திறமையில் உயர்ந்தவர்களுக்கு வழங்கும் “பரோனெட்” என்ற பட்டத்தை கொடுத்துப் பாராட்டினார். ஜோசப் லிஸ்டர் தனது மனைவியுடன் 1893-ஆம் ஆண்டில் இத்தாலி நாட்டுக்குச் சென்றார். சென்ற இடத்திலே எதிர்பாராத நோய் அவரது மனைவியைத் தாக்கியதால் அவர் மரணம் அடைந்தார்.

வாழ்க்கைத் துணை நலமாக நடமாடிய ஜென்ஸ் சைமி என்ற மாதரசியை இழந்த ஜோசப் லிஸ்டர் மனம் தளர்ந்தார். வாழ்வே அவுருக்குக் கசந்தது. சூன்யமாகிவிட்ட தனது வாழ்க்கையை எண்ணி எண்ணி அவர் அனுபவித்த வேதனை கொஞ்ச நஞ்சமல்ல. அதனால், தனது ஆராய்ச்சி மீதே வெறுப்பானார். எதிலும் ஈடுபடாமல் நொந்த மனத்தோடுக் காலம் தள்ளினார். காரணம், அவருடைய மனைவி ஜென்ஸ் சைமி